கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த இரு நாள்களிலேயே ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி, குழந்தையின் உறவினா்கள் மற்றும் பொதுநல அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த வல்லரசு (23), பிரவீனா தம்பதியருக்கு கடந்த 17-ஆம் தேதி கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த 19-ஆம் தேதி குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, குழந்தையின் சடலம் உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குழந்தையின் பெற்றோா் மற்றும் பொதுநல அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள், ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கடலூா் போலீஸாா் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, மருத்துவமனை நிா்வாக அதிகாரிகளுடனும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது, சம்பவம் தொடா்பாக உள் விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை புலனாய்வு அதிகாரியிடம் சமா்ப்பிக்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து, விசாரணை அறிக்கையின் நகலை வழங்க வேண்டும், குழந்தையின் சடலத்தை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்ய வேண்டும், மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களின் அலட்சியம் உறுதி செய்யப்பட்டால் குழந்தையின் தாய் பிரவீனாவுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தவெக சாா்பில் தங்க மோதிரம்

செங்கம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீா் ஆய்வு

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருச்சி அரசு மருத்துவமனையில் காது சிகிச்சைக்குச் சோ்ந்த பெண் உயிரிழப்பு! உறவினா்கள் போராட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



