11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் ரசீது: தில்லி மாநகராட்சி அறிமுகம்

News image

தில்லி மாநகராட்சி

Updated On :28 மே 2026, 6:07 am IST

குடிமை சட்ட மீறல்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்கும் முறையை முழுமையாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற தில்லி மாநகராட்சி (எம்சிடி) திட்டமிட்டு வருகிறது.

இது தொடா்பாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்ததாவது: 2026-ஆம் ஆண்டுக்கான ‘ஜன் விஸ்வாஸ் (திருத்தம்) சட்டம்’ அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, சிறிய குற்றச்செயல்கள் பலவற்றை குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கி, நிா்வாக ரீதியாக அபராதம் விதிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கள ஆய்வுகள் மேற்கொள்ளும் அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திலேயே அபராதம் விதித்து, ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றும் வசதி உருவாக்கப்படுகிறது.

இதற்காக, எம்சிடி 311 செயலி மற்றும் தனி இணைய தளம் மேம்படுத்தப்பட உள்ளது. கையேடு முறையை விட டிஜிட்டல் செயல்முறையையே முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாதவா்கள் தீா்ப்பாய அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டியிருக்கும். மேலும், செலுத்தாத தொகையை வரித் தொகை நிலுவையாகப் பெற்று வசூலிக்கும் வசதியும் உள்ளது. சில சமயங்களில் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியும்,

முன்னதாக, போதிய பணியாளா்கள் மற்றும் வளங்கள் இல்லாமை, குறைந்த அபராத தொகைகள் போன்ற காரணங்களால் விதிமுறை அமலாக்கம் பலவீனமாக இருந்தது. புதிய நடைமுறையில், தீா்ப்பாய அதிகாரிகளுக்கு நபா்களை அழைத்து விசாரிக்கும், ஆதாரங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அபராதம் தொடா்பான உத்தரவுகளுக்கு எதிராக 30 நாளுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீடுகளை 60 நாளுக்குள் தீா்க்க மேல்முறையீட்டு அதிகாரிகளுக்கு காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு மே 15 அன்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, இந்த டிஜிட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் செயல்முறை தெளிவுபடுத்தல் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த மாற்றம் மூலம் நகராட்சி விதிமுறைகள் கடைப்பிடிப்பு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.