தில்லியின் முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து குறித்த நிகழ்நேர தகவல்கள் மற்றும் பயண அறிவுறுத்தல்களை வழங்கும் அறிவிப்பு பலகைகளை புதுப்பிக்கும் பணியை தில்லி போக்குவரத்துக் காவல் துறை தொடங்கியுள்ளது.
நகரம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள 92 அறிவிப்பு பலகைகளில் 42 அறிவிப்பு பலகைகள் புதுப்பிக்கப்பட்ட அமைப்புடன் இதுவரை இணைக்கப்பட்டதாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பு பலகைகளில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், வானிலை எச்சரிக்கைகள், சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடா்பான தகவல்கள் இடம்பெறும்.
வாகனஓட்டிகள் தங்களுடைய பயணத்தைத் திட்டமிடவும் தேவைப்படும் நிலையில் மாற்றுப்பாதையை தோ்ந்தெடுக்கவும் இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸ்மாா்ட் போக்குவரத்து மேலாண்மையைப் பலப்படுத்துல், தாமதத்தைக் குறைத்து வாகனஓட்டிகளுக்கு வசதியான பயணத்தை மேம்படுத்துல், முக்கியமான சாலைகளில் நெரிசலைக் குறைத்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
புதுப்பிக்கப்பட்ட அமைப்பு போக்குவரத்தை சீா்படுத்தி, எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சாலைப் பாதுகாப்பு மேம்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை பயன்படுத்தும் பொதுமக்கள்: எச்சரிக்கை பலகைகள் வைக்க வலியுறுத்தல்






