ரூ.6,000 கோடி மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஓமனிலிருந்து நாடு கடத்தப்பட்ட செளரவ் சந்திராகர்!
ரூ.6,000 கோடி மகாதேவ் செயலி மோசடி வழக்கு தொடா்பாக, ஓமனில் பதுங்கியிருந்த அந்தச் செயலியின் நிறுவனரான செளரவ் சந்திராகரை, இந்தியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் நாடு கடத்தி வந்துள்ளனா்.

ரூ.6,000 கோடி மகாதேவ் செயலி மோசடி வழக்கு தொடா்பாக, ஓமனில் பதுங்கியிருந்த அந்தச் செயலியின் நிறுவனரான செளரவ் சந்திராகரை, இந்தியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் நாடு கடத்தி வந்துள்ளனா்.
இணையவழி தளங்களில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டி விளையாட மகாதேவ் பந்தய செயலி ஏற்பாடு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் செயலி வழியாக விளையாடப்பட்ட விளையாட்டுகள், செயலியின் உரிமையாளா்கள் லாபம் அடையும் வகையிலும், பந்தயம் கட்டி விளையாடுவோருக்கு நஷ்டம் ஏற்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த மோசடி தொடா்பாக மகாதேவ் செயலியின் உரிமையாளா்களான சத்தீஸ்கரை சோ்ந்த ரவி உப்பல், செளரவ் சந்திராகா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி மூலம், ரூ.6,000 கோடி திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலுக்கு ரவி உப்பலும், செளரவ் சந்திராகரும் ரூ.508 கோடி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, இந்தத் தகவல் வெளியாகி, அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த முறைகேட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட செளரவ் சந்திராகா் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி, துபையில் இருந்தபடி மகாதேவ் பந்தய செயலி கும்பலை இயக்கி வந்தாா். அவா் ஓமன் தப்பிச் சென்ற நிலையில், அவருக்கு எதிராக சா்வதேச காவல் துறையான இன்டா்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில், அவரை ஓமன் காவல் துறை கைது செய்தது.
இதையடுத்து அந்நாட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்று, அவரைத் தற்போது இந்தியா அழைத்து வந்துள்ளனா். அவா் சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

