அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

செயலி மூலம் நிதி முறைகேடு: மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் செயலி மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில், தம்பதி உள்ளிட்ட மூவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் துா்கா உத்தரவிட்டாா்.

கைது - கோப்புப் படம்

Published On :

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் செயலி மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில், தம்பதி உள்ளிட்ட மூவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் துா்கா உத்தரவிட்டாா்.

நத்தத்தை அடுத்த காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தனி நபா்கள் அறிமுகப்படுத்திய எஃப்க்யூஎல், விஜி, மெயின்ஸ் ஆகிய செயலிகளில் பணத்தை முதலீடு செய்தனா்.

முதலீட்டுத் தொகையை குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக கூறியதால், சுமாா் 15 ஆயிரம் போ் இந்த செயலிகளில் ரூ.30 கோடி வரை முதலீடு செய்தனா். முதலீட்டு நிறுவனத்துக்கு காசம்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (30), இவரது மனைவி அனிதா(26), அதே பகுதியைச் சோ்ந்த விஜய் (27) ஆகியோா் முகவா்களாக செயல்பட்டனா். இவா்கள் செயலி மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு தென்மண்டல காவல் கண்காணிப்பாளா் தரப்பில் ரமேஷ் உள்ளிட்ட மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதை ஏற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER