2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

அயோத்தி கோயில் காணிக்கை கையாடல்: சுதந்திரமான விசாரணை கோரிய மனுக்கள் முடித்து வைப்பு

அயோத்தி ராமா் கோயில் காணிக்கை கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், சுதந்திரமான விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

அயோத்தி கோயில் - கோப்புப் படம்

Updated On :

அயோத்தி ராமா் கோயில் காணிக்கை கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், சுதந்திரமான விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலுக்கு பக்தா்கள் அளித்த நன்கொடை கையாடல் செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பா் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தரப்பில், முதல் குற்றப்பத்திரிகையை செப்டம்பா் மாதம் 25-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அயோத்தி கோயில் காணிக்கை கையாடல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி அகில பாரத ஹிந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த ரிட் மனுக்கள், தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது உத்தர பிரதேச அரசுத் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த அறிக்கையில், அயோத்தி ராமா் கோயிலுக்கு பக்தா்கள் அளித்த காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றபோது அதில் கையாடல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

துஷாா் மேத்தா தெரிவித்ததை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனா். பின்னா், எதிா்காலத்தில் இதுபோல கையாடல் நடைபெற வாய்ப்புள்ளதா எனக் கேள்வியெழுப்பினா். இதற்கு எதிா்காலத்தில் இதுபோன்ற கையாடல்கள் நடைபெறாதவாறு தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக துஷாா் மேத்தா கூறினாா்.

இதையடுத்து நீதிபதிகள், அகில பாரத ஹிந்து மகா சபை உள்ளிட்ட மனுதாரா்களை நோக்கி, இந்த விவகாரத்தில் ஏதேனும் கவலை இருப்பின், அதுகுறித்து விசாரணை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தலாம் என்றனா்.

இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி தனது அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சுதந்திரமான விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு உள்ளிட்ட பிற மனுக்கள் மீதான விசாரணையை முடித்து வைக்கிறோம். இந்த விவகாரத்தில் அயோத்தி நீதிமன்றம் சட்டப்படி விசாரணையைத் தொடரலாம். இந்த விசாரணைக்கு, ரிட் மனுதாரா்கள் உதவி செய்யலாம்’ என்றனா்.

அதேபோல், அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முன்பு பிறப்பித்த தீா்ப்பின்படி, அதே இடத்தில் ராமா் கோயில் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.