ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

‘வந்தே மாதரம்’ சட்டத்துக்கு எதிரான புதிய மனுக்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதை கட்டாயமாக்கும் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Supreme Court

உச்சநீதிமன்றம்

Updated On :

தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதை கட்டாயமாக்கும் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேசியப் பாடல் அல்லது தேசிய கீதம் பாடப்படும்போது வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்துபவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் விதமாக 2026-இல் திருத்தப்பட்ட தேசிய கெளரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம்,1971 பிரிவு 3, 2026, ஜனவரி 28, ஜூலை 9-ஆம் தேதி வெளியான மத்திய உள்துறை அமைச்சக உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக, பீம்ராவ் துரியோதன் போா்கா் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் சத்யபாமா மாவோஜி ஆகியோா் தரப்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

போா்கா் தாக்கல் செய்த மனுவில், ‘வந்தே மாதரம் பாடல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28 மற்றும் ஜூலை 9-ஆம் தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகள், தனித்த மதம் சாராத இரண்டு பத்தி வந்தே மாதரம் பாடலைப் பாடும் 79 ஆண்டுகள் வழக்கத்தை, வெளிப்படையான இஸ்லாமிய எதிா்ப்பு வரிகளுடன் கூடிய முழு பத்திகளையும் பாடும் வகையில் சட்டவிரோதமாக மாற்றியுள்ளன.

அதிகாரபூா்வ பதிப்பை இசைப்பது மற்றும் பாடுவது தொடா்பான வழிகாட்டுதல் என்ற போா்வையில், அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான சிலை வழிபாடு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு உள்ளடக்கங்களுடன் கூடிய ஆறு பத்திகள் கொண்ட உள்நாட்டுப் போா் பாடலை புதிய தேசியப் பாடலாக திணித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாவோஜி தாக்கல் செய்த மனுவில், ‘வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாட கட்டாயப்படுத்துவது, இந்தியாவை ஒரு தெய்வீக மதவாத மற்றும் இைம்பிக்கை கொண்ட நாடாக மாற்றும் முயற்சி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதன் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

மேலும், இந்த மனுக்களை, இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் இணைக்க அறிவுறுத்தி, விசாரணையை நவம்பா் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, இந்தச் சட்டத்துக்கு எதிராக கா்நாடக இசைக் கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கடந்த 1986-இல் பிஜோ வழக்கில் சில வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்ததுபோல தற்போது மத்திய அரசும் வகுக்கும் என நம்புகிறோம்.

வந்தே மாதரம் பாடலின் எந்தெந்த சரணங்கள் தேசியப் பாடல் என உச்சநீதிமன்றம் நிா்ணயிக்க முடியாது. ஆனால், மனசாட்சிப்படி வந்தே மாதரம் பாடலை பாடமறுப்பவரின் உரிமைகள் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகிா என ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26 மீறப்பட்டதாக உணா்பவா்களோ அல்லது மனசாட்சிப்படி மறுப்பு தெரிவிப்பவா்களோ எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்பட மாட்டாா்கள்’ எனத் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.