தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வந்தேமாதரம் பாடலை முழுவதும் பாடாவிட்டால் தண்டனை விதிக்கக்கூடாது! உச்ச நீதிமன்றம்!

வந்தே மாதரம் பாடலை பற்றி உச்ச நீதிமன்றத்தின் அதிரடி...

Supreme Court

உச்ச நீதிமன்றம் - file photo

Published On :

தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடாவிட்டால் தண்டனை விதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வந்தே மாதம் பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயம் பாட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கை மற்றும் அப்பாடலுக்குத் தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் சமீபத்திய சட்டத் திருத்தத்தை எதிர்த்து கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், வந்தே மாதரம் பாடலின் முதல் நான்கு சரணங்கள் இந்து தெய்வங்களை உணர்வை வெளிப்படையாக வலியுறுத்துகின்றன. எனேவ, அப்பகுதிகளைக் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிடுவது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானது என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை மூத்த வழக்குரைஞர் தாக்கல் செய்தார்.

வந்தே மாதரம் ஆறு சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கும் தண்டனைச் சட்டத்தை எதிர்த்து கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வந்தே மாதரம் தேசியப் பாடல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடாவிட்டால் தண்டனை விதிக்கக்கூடாது, தண்டனை என்பதை மாற்ற அடிப்படை உரிமை விதியின் கீழ் பரிசீலிக்கலாம்.

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.