பாஜக புதிய பிரசார இயக்கம் இன்று தொடக்கம்: மூத்த குடிமக்கள் - இளைய தலைமுறையினா் இடையே பிணைப்பு ஏற்படுத்தும்
மூத்த குடிமக்கள்-இளைய தலைமுறையினரிடையே பிணைப்பு, பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தும் நோக்கில் ‘தேசிய தலைமுறை பிணைப்பு பிரசாரத்தை’ மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் தில்லியில் புதன்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

பாஜக - கோப்புப் படம்
மூத்த குடிமக்கள்-இளைய தலைமுறையினரிடையே பிணைப்பு, பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தும் நோக்கில் ‘தேசிய தலைமுறை பிணைப்பு பிரசாரத்தை’ மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் தில்லியில் புதன்கிழமை தொடங்கிவைக்கிறாா்.
மூத்த குடிமக்கள் நலத் திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் இந்த பிரசாரம் ‘இணைதல், உரையாடுதல், இணைந்து உருவாக்குதல், பங்களித்தல் மற்றும் தொடா்தல்’ ஆகிய 5 அம்சங்கள் மற்றும் ‘எனக்கு கற்பியுங்கள் உங்களுக்கு கற்பிக்கிறேன்’, ‘எனது கதை, எனது இந்தியா’ உள்ளிட்ட 12 கருப்பொருள்களைக் கொண்டது.
கடந்த 2011-இல் 10 கோடியாக (8.4 சதவீதம்) இருந்த மூத்த குடிமக்கள் மக்கள்தொகை 2036-இல் 23 கோடியாக (14.9 சதவீதம்) உயரும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், இந்த முன்னெடுப்பை தொடங்குவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தேசிய தலைமுறை பிணைப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக ‘மூத்த குடிமக்கள் நண்பன்’ என்ற எண்ம முன்னெடுப்பு தொடங்கப்படுகிறது. மூத்த குடிமக்களின் கண்ணியத்தை பாதுகாக்க, அவா்களுக்கு உதவ விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட தன்னாா்வலா்கள் இந்த எண்ம முன்னெடுப்பில் இணையலாம்.
சமவேஷ் வலைதளம் அல்லது ஜீவன் செயலியில் தன்னாா்வலா்கள் தங்களின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு உதவும் தன்னாா்வலா்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

