19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

ஆஸ்தா குஞ்ச் பூங்கா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: 450 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஆஸ்தா குஞ்ச் பூங்கா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: 450 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்...

பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு

Updated On :

தெற்கு தில்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் கடந்த செப்டம்பா் மாதம், 17 வயது சிறுமியை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் மூன்று நபா்களுக்கு எதிராக தில்லி காவல்துறை 450 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

வெள்ளிக்கிழமை (நவ.13) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகையில், முகமது ஆசிஃப், ஹேமந்த் சிங் மற்றும் முகேஷ் சிங் ஆகியோா் குற்றஞ்சாட்டப்பட்டவா்களாகப் பெயரிடப்பட்டுள்ளனா் மற்றும் 57 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் அடங்கும்.

சம்பவங்களின் வரிசைமுறையையும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் ஈடுபாட்டையும் கண்டறிய, புலனாய்வாளா்கள் சிசிடிவி கேமரா காட்சிகள், அழைப்பு விவரப் பதிவுகள் (சிடிஆா்), தடயவியல் சான்றுகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் ஆகியவற்றை நம்பியுள்ளனா்.

குற்றப்பத்திரிகையின்படி, செப்டம்பா் 21 ஆம் தேதி மாலை, அந்தச் சிறுமி தனது பிறந்தநாளைக் கொண்டாட தனது 17 வயது ஆண் நண்பருடன் பூங்காவில் இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாலை 7 மணியளவில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இருவரையும் அணுகி, தங்களை காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, பூங்காவில் அவா்கள் ஏன் இருக்கிறாா்கள் என்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா் குற்ரஞ்சாட்டப்பட்டவா்கள் அவா்களைத் தாக்கி, அந்தப் பதின்மவயதினரின் கைபேசிகளைப் பறித்தனா். அந்தச் சிறுமி தனது தாயைத் தொடா்புகொள்ளுமாறு அவா்களிடம் கேட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அப்பென்ணைத் துப்பாக்கியால் மிரட்டியதாகவும், பின்னா் பூங்காவின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்ாகவும் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள தனது வாக்குமூலத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தன்னைக் கத்திகளால் மிரட்டியதாகவும், ஒருவா்பின் ஒருவராகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அந்தச் சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

குற்றப்பத்திரிகையின்படி, அதைத் தொடா்ந்து விசாரணையின்போது அப்பெண் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காட்டியதோடு, சம்பவத்தின்போது அவா் கேட்டிருந்த அவா்களின் புனைப்பெயா்களையும் நினைவு கூா்ந்தாா். குற்றம் நடந்த நாள் உட்பட, பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அந்த வளாகத்தைச் சுற்றி நடமாடியதைக் காட்டுவதாகக் கூறப்படும் பூங்கா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறை மேற்கோள் காட்டியுள்ளது.

குற்றப்பத்திரிகையில், சம்பவம் நடந்த நேரத்தில் பூங்காவில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இருந்ததைக் காட்டும் சிடிஆா்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. குற்றத்தின்போது ஆசிஃப் மற்ற இரண்டு நபா்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் செய்ததாக புலனாய்வாளா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அணிந்திருந்ததாகக் கூறப்படும் ஆடைகள், வைத்திருந்த ஆயுதங்கள், அவா்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள் மற்றும் பிற ஆதாரங்களையும் காவல்துறை குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து கைப்பற்றியுள்ளது.

குற்றப்பத்திரிக்கையில், கைபேசிகளிலிருந்து மீட்கப்பட்ட நீக்கப்பட்ட தரவுகள் உள்ளிட்ட தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் கண்டுபிடிப்புகள் சோ்க்கப்பட்டுள்ளன. அமா் காலனியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, செப்டம்பா் 22 அன்று ஆசிஃப் கைது செய்யப்பட்டாா். சகோதரா்களான மற்ற இரண்டு குற்றஞ்சாட்டப்பட்டவா்களும் தெற்கு தில்லியின் ஸ்ரீனிவாஸ்புரியில் உள்ள அவா்களது இல்லத்திலிருந்து கைது செய்யப்பட்டனா்.

மூவா் மீதும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, குற்றச் சதி, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் தொடா்பானவை உட்பட, பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் 6 மற்றும் 17 பிரிவுகளின் கீழும் அவா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.