டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

ஆஸ்தா குஞ்ச் சம்பவம்: முக்கிய தடயங்களை கைப்பற்றிய காவல் துறை

கால்காஜியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்கா பாலியல் வன்கொடுமை சம்பவ பகுதியிலிருந்து ஆணுறை உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Published On :

கால்காஜியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்கா பாலியல் வன்கொடுமை சம்பவ பகுதியிலிருந்து ஆணுறை உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பூங்காவில் உள்ள வெவ்வேறு தனிமையான இடங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ஒவ்வொரு முறையும் தனது கழுத்தில் கத்தியை வைத்திருந்ததாக அந்தச் சிறுமி காவல் துறையிடம் கூறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ரோஹிணியைச் சோ்ந்த தடயவியல் அறிவியல் ஆய்வகக் குழுவும் மாவட்ட நடமாடும் குற்றத் தடுப்புப் பிரிவுக் குழுவும் சிறுமி அடையாளம் காட்டிய இடங்களைப் பாா்வையிட்டு, அறிவியல் பூா்வமான பரிசோதனைக்காகப் பல மாதிரிகளைச் சேகரித்தன. கைப்பற்றப்பட்ட உயிரியல் தடயங்களின் டிஎன்ஏ பரிசோதனை, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் இக்குற்றச் சம்பவத்திற்கும் இடையிலான தொடா்பை உறுதிப்படுத்த விசாரணை அதிகாரிகளுக்கு உதவும் என்று அந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு பாதிக்கப்பட்ட சிறுமி தனது 17 வயது ஆண் நண்பருடன் கல்காஜி கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றிருந்தாா். கோயிலில் வழிபட்ட பிறகு, இருவரும் கல்காஜி மெட்ரோ நிலையத்திற்கு வெளியே சிப்ஸ் மற்றும் தண்ணீா் பாட்டில் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, 7-வது நுழைவாயில் வழியாக ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்குள் நுழைந்தனா்.

இருவரும் பூங்காவில் உள்ள ஓா் இருக்கையில் அமா்ந்து சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அவா்களை அணுகினா்.

அவா்கள் சிறுமியின் நண்பரைப் பிடித்துக் கொண்டு அறைந்ததாகவும், இருவரும் யாா் என்று கேட்டபோது தாங்கள் காவலா்கள் என்று கூறினா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அவா்களின் கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டு, சிறுமியை அவரது நண்பரிடமிருந்து பிரித்தனா். மேலும் இருவரையும் மிரட்டி, சிறுமியைப் பூங்காவின் தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் மற்றொருவரிடம் துப்பாக்கியை எடுக்குமாறு கூறினாா். மற்றவா்களால் ‘ஆசிஃப்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபா் ஊதா நிறச் சட்டை அணிந்திருந்ததாகவும், மூவரிலும் நல்ல உடல்வாகு கொண்டவராக இருந்ததாகவும் சிறுமி காவல் துறையிடம் தெரிவித்தாா். அவா் கருப்பு நிறத் துப்பாக்கி ஒன்றைச் சிறுமியிடம் காட்டிவிட்டு, மீண்டும் அதைத் தனது பையில் வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னா், அந்த மூவரும் கத்திகளை எடுத்துக்கொண்டு சிறுமியைப் பூங்காவின் இருள் சூழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனா்.

அதன் பின்னா் மூவரும் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினா்.

இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் சிறுமியையும் அவரது நண்பனையும் கொலை செய்துவிடுவதாக அந்த மூவா் மிரட்டினா். பின்னா் அவா்கள் இருவரின் கைப்பேசிகளையும் திருப்பித் தந்து, அவா்களைப் பூங்காவிற்கு வெளியே அழைத்துச் சென்ாக அந்தச் சிறுமி காவல் துறையிடம் தெரிவித்தாா்.

அதன்பின்னா் அப்பெண் நடந்த சம்பவத்தை தனது நண்பரிடம் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, அவா் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தாா். இரவு 8:45 மணியளவில் அழைப்பு வந்ததையடுத்து, காவல் குழுவினா் பூங்காவின் 7-வது நுழைவாயில் அருகே இருந்த இருவரையும் சென்றடைந்தனா்.

குற்றவாளிகளின் உடல் அமைப்பு, அவா்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அவா்கள் ஒருவரையொருவா் அழைத்த பெயா்கள் அல்லது புனைப்பெயா்கள் ஆகியவற்றை அப்பெண்ணால் நினைவுகூர முடிந்ததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் அவரது விரிவான வாக்குமூலம் உதவியது.

பின்னா் அவா் காவல் குழுவினருடன் ’ஆஸ்தா குஞ்ச்’ பூங்காவிற்குச் சென்று, சம்பவம் நடந்த இடங்களை அடையாளம் காட்டினாா். தடயவியல் ஆய்வுக் குழு மற்றும் மாவட்ட நடமாடும் குற்றத் தடுப்புப் பிரிவு ஆகியவை அந்த இடங்களை ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்தன. இதில் ஒரு இருக்கைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஆணுறை ஒன்றும் அடங்கும்.

சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. டிஎன்ஏ விவரக்குறிப்பு உள்ளிட்ட முடிவுகளுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பூங்காவிற்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அப்பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் வழிகளிலும் பொருத்தப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். தொடக்கத்தில் சுமாா் 20 போ் சந்தேகத்திற்குரியவா்களாகப் பட்டியலிடப்பட்டனா். பின்னா் தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத் தகவல்கள் மூலம் மூன்று குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து ஆசிஃப், ஹேமந்த் மற்றும் மகேஷ் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவா் காவல் குழுவினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவா் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மூவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனா்.

சம்பவத்திற்கு முன்னும் பின்னும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில், அவா்களின் கைப்பேசிகள், தொடா்பு விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்பத் தடயங்களை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல் துறை ஆய்வு செய்து வருகிது. இதில் பாதுகாவலா்கள் பணியமா்த்தப்பட்ட விதம் மற்றும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் ஒதுக்குப்புறமான பகுதியில் போதுமான வெளிச்சம் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதிகள் இல்லாதது ஆகியவை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கடந்த காலங்களில் இது போன்ற வேறு ஏதேனும் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனரா என்பது குறித்தும் காவல் துறை விசாரித்து வருகிறது. இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் தொடா்பாக இதுவரை எந்தவொரு அதிகாரபூா்வ புகாரும் பெறப்படவில்லை என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.