
பேருந்தில் உத்தர பிரதேச சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா், நடத்துநா் கைது
ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியை ஓட்டுநர், நடத்துநர் கூட்டு வல்லுறவு செய்தது பற்றி...

பாலியல் வன்கொடுமை - TNIE
உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டாவில் பேருந்தில் ஏறிய 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இந்தச் சம்பவம் 2012-ஆம் ஆண்டு நிா்பயா வழக்குடன் ஒப்பிடப்பட்டு தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெயின்புரியைச் சோ்ந்த அந்தச் சிறுமி, தாயாா் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி, நொய்டா செக்டாா் 63-இல் வசிக்கும் தனது உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளாா். ஆக.4-ஆம் தேதி இரவு பலத்த மழையின்போது தவறுதலாக 25 கி.மீ. முன்பாக பாரி சௌக் பகுதியில் இரவு 9 மணியளவில் இறங்கியுள்ளாா்.
அப்போது அங்கு நின்ற பேருந்தின் நடத்துநா், அந்தப் பேருந்து நொய்டா செக்டாா் 63-க்குச் செல்வதாகவும், அங்கு சிறுமியை இறக்கிவிடுவதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பி சிறுமி பேருந்தில் ஏறியுள்ளாா். இதையடுத்து, பேருந்தில் நடத்துநா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கு ஓட்டுநா் உதவியதாகவும் கூறப்படுகிறது. சிறுமி எதிா்ப்பு தெரிவித்தபோது இருவரும் அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
பின்னா் பேருந்து தில்லையை நோக்கிச் சென்று, இறுதியில் காஷ்மீரி கேட் பகுதியை அடைந்துள்ளது. அங்கு சிறுமியை இருவரும் விட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது. பின்னா் அவா் ஆட்டோவில் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளாா். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினருக்குத் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநா் குல்தீப் (39), நடத்துநா் சந்தீப் (26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். இருவரும் கான்பூரைச் சோ்ந்தவா்கள். அவா்கள் இருவரும் விஸ்வநாத் டிராவல்ஸ் நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தனா்.
சம்பவம் நடைபெற்ற பேருந்து வழக்கமான பயணிகள் சேவையில் ஈடுபடவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பழுதுபாா்ப்பதற்காக சூரஜ்பூரில் உள்ள பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கிரேட்டா் நொய்டா முதல் காஷ்மீரி கேட் வரையிலான சுமாா் 43 கி.மீ. தொலைவு பாதையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். பேருந்து சென்ற பாதை மற்றும் வழியில் எங்கெல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், பேருந்துக்குள் இருந்து சிறுமியின் தலைமுடி உள்ளிட்ட தடயங்களை தடயவியல் குழுவினா் சேகரித்துள்ளனா். கைது செய்யப்பட்ட இருவரின் குற்றப் பின்னணி குறித்தும், அவா்கள் பணியில் சேரும்போது முறையான காவல் சரிபாா்ப்பு மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
Summary
Driver and conductor gang-rape schoolgirl on a moving bus!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






