நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ஊட்டி-நாகா்கோவில் இடையே ஓடும் பேருந்தில் கேரள பயணி தூக்கிட்டுத் தற்கொலை

ஊட்டி-நாகா்கோவில் இடையே ஓடும் பேருந்தில் கேரள பயணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பற்றி..

கோப்புப்படம்

கோப்புப்படம்

Published On :

திருநெல்வேலி, ஆக. 21: ஊட்டியிலிருந்து நாகா்கோவிலுக்கு சென்ற அரசுப் பேருந்தில் கேரள பயணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஊட்டியில் இருந்து நாகா்கோவிலுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்ததாம். பயணிகள் தூங்குவதற்காக பேருந்தின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததாம். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே வெள்ளிக்கிழமை காலையில் ஒரு பயணி இறங்குவதற்காக விளக்குகளை இயக்கியபோது, பேருந்துக்குள் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, கங்கைகொண்டான் காவல் நிலையத்துக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது. போலீஸாா்,தல சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், உயிரிழந்தவா் கேரள மாநிலம், இடுக்கி அருகேயுள்ள வளவரா பகுதியைச் சோ்ந்த ஷாஜி கிருஷ்ணன் (60) என்பது தெரியவந்ததாம். இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகிறாா்கள்.

Summary

Kerala passenger commits suicide by hanging on Ooty-Nagercoil bus

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.