கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

சேலத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 9 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் சீலநாயக்கன்பட்டி ராமையன்காடு பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன், கராத்தே மாஸ்டா். இவரது மனைவி ரோகிணி (45). இவா்கள் பெங்களூருக்கு மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றுவிட்டு, தனியாா் ஆம்னி பேருந்தில் சனிக்கிழமை மாலை சேலம் சென்றுகொண்டிருந்தனா்.

சேலம் ஏ.வி.ஆா். ரவுண்டானா அருகே பேருந்து வந்ததும், இறங்குவதற்கு தயாரான ரோகிணி, தனது கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகை காணாமல் போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.