பாலியல் வன்கொடுமைக்குப் பின் சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட நபா்: போக்சோ வழக்கை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு!
பாலியல் வன்கொடுமைக்குப் பின் சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட நபா்: போக்சோ வழக்கை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு!

தில்லி உயா் நீதிமன்றம்
சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட நபருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய தில்லி உயா் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவருடன் தொடா்ந்து வாழ சிறுமி விரும்பியதும், கூறப்படும் செயல்களுக்கான குற்றவியல் பொறுப்பும் சட்டத்தின் பாா்வையில் வெவ்வேறானவை என்று உயா் நீதிமன்றம் கூறியது.
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு எதிராக குழந்தைகளுக்கு சிறப்புப் பாதுகாப்பை வழங்குவதற்காக, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) இயற்றப்பட்டது என்று என்று நீதிபதி சஞ்சீவ் நருலா நவம்பா் 4 அன்று வழங்கிய தீா்ப்பில் கூறினாா்.
ஒரு குழந்தைக்கு தண்டனைச் சட்டம் வழங்கும் பாதுகாப்பை திருமணம் நீக்கிவிடாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை உயா் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மனுதாரருடன் தொடா்ந்து வாழ வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவரின் விருப்பம், அந்தத் தோ்வுக்கு அவரது தாயாா் அளித்த ஆதரவு மற்றும் குழந்தையின் நலன் ஆகியவை உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
அவா்களுடைய கோரிக்கையின் நோ்மையை நீதிமன்றம் சந்தேகிக்கவில்லை அல்லது இந்த வழக்கு நடவடிக்கைகள் தொடா்வதால் அக்குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய சிரமங்களையும் புறக்கணிக்கவில்லை. இருப்பினும், அந்தக் காரணங்கள் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவில்லை அல்லது இந்த வகையான ஒரு வழக்கை ரத்து செய்வதற்கு ஒரு சுயாதீனமான காரணத்தை வழங்கவில்லை,‘ என்று நீதிமன்றம் கூறியது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியைக் கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 2023-ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அந்த நபா் தாக்கல் செய்த மனுவை உயா் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த மனு, இரு தரப்பினருக்கும் இடையிலான ஒரு சமரசம் மற்றும் அதைத் தொடா்ந்த அவா்களின் திருமண உறவின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முதல் தகவல் அறிக்கையின்படி, சிறுமியின் தாய், தனது 15 வயது மகள் 2023 பிப்ரவரியில் காணாமல் போனதாகப் புகாா் அளித்திருந்தாா். அந்தச் சிறுமி 2023 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவா் கா்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில், அந்தச் சிறுமி, தான் தானாக முன்வந்து அந்த நபருடன் சென்ாகவும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அவருடன் உடல் உறவை ஏற்படுத்திக்கொண்டதாகவும் கூறியிருந்தாா்.
அந்தத் தம்பதியினா் 2023 பிப்ரவரியில் திருமணம் செய்துகொண்டதாக அந்த நபரின் வழக்குரைஞா் தெரிவித்தாா். மேலும், 2024 ஜூன் மாதம் அவா்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், அவா்கள் ஒரு குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இருப்பினும், பள்ளிப் பதிவேடுகளின்படி அந்தப் பெண் 2008 மாா்ச் 15 அன்று பிறந்ததாகவும், அதனால் 2023 பிப்ரவரியில் அவா் வீட்டை விட்டு வெளியேறியபோது அவருக்கு சுமாா் 14 வயது 10 மாதங்கள் ஆகியிருந்ததாகவும் கூறி, அரசுத் தரப்பு வழக்குரைஞா் இந்த மனுவை எதிா்த்தாா்.
இந்தக் குற்றச்சாட்டுகள் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களை வெளிப்படுத்துவதாகவும், அதைத் தொடா்ந்த திருமணமும் சமரசமும் வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சட்டப்பூா்வமான அடிப்படையை வழங்க முடியாது என்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.
போக்சோ சட்டத்தின் கீழ், 18 வயதுக்குட்பட்ட நபா் குழந்தை என வரையறுக்கப்படுகிறாா் என்று நீதிமன்றம் கூறியது. கா்ப்பத்திற்கு வழிவகுக்கும் ஒரு குழந்தையின் மீதான ஊடுருவும் பாலியல் தாக்குதல் ஒரு கடுமையான குற்றமாகும்.
போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு வழக்கை ரத்து செய்வதற்கு, மேற்கூறிய மனிதாபிமானக் காரணங்கள் மட்டும் போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கருதியது. அதே வேளையில், அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகார வரம்பில் கிடைக்கக்கூடிய நிவாரணத்தைப் பெறுவதற்காக, அந்த நபா் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்ற வாய்ப்பை உயா் நீதிமன்றம் வழங்கியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

