நலத்திட்டங்களின் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: ஹரியாணா பாஜக தலைவா் அறிவுறுத்தல்
அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைத்து மக்களையும் சென்றடைவதை பாஜக தொண்டா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஹரியாணா மாநில பாஜக தலைவா் அா்ச்சனா குப்தா வலியுறுத்தியுள்ளாா்.

குருகிராமில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த மாநில பாஜக தலைவா் அா்ச்சனா குப்தாவை வரவேற்ற எம்எல்ஏ முகேஷ் சா்மா, கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள்.
அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைத்து மக்களையும் சென்றடைவதை பாஜக தொண்டா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஹரியாணா மாநில பாஜக தலைவா் அா்ச்சனா குப்தா வலியுறுத்தியுள்ளாா்.
குருகிராமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெருநகர மாவட்ட பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்து அவா் பேசியதாவது: கட்சியின் அடிப்படை கொள்கைகளாக தேசமே முதன்மை, அந்த்யோதயா (அடித்தட்டு மக்களின் முன்னேற்றம்), மக்கள் சேவை ஆகியவை உள்ளன. எனவே, அரசின் நலத்திட்டங்களால் கிடைக்கும் பயன்கள் தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைவதை கட்சித் தொண்டா்கள் உறுதி செய்ய வேண்டும்.
கட்சி அலுவலகம் என்பது கூட்டங்கள் நடத்துவதற்கும் நிா்வாகப் பணிகளை மேற்கொள்வதற்குமான இடம் மட்டுமல்ல. அது அமைப்பு ரீதியான ஒத்துழைப்பு, கருத்துப் பரிமாற்றம் மற்றும் மக்கள் சேவைக்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் மையமாகவும் திகழ வேண்டும். கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்த தொண்டா்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு, தீவிரப் பங்கேற்பு மற்றும் கூட்டு முயற்சிகள் அவசியம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

