போலி அழைப்பு மையம் மூலம் வா்த்தகா்களிடம் மோசடி: 20 போ் கைது
வெளிநாட்டு வாடிக்கையாளா்களை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி நாடு முழுவதும் உள்ள உற்பத்தியாளா்கள், வா்த்தகா்களிடம் மோசடியில் ஈடுபட்ட போலி அழைப்பு மையத்தை தில்லி காவல் துறை கண்டுபிடித்து, அதன் உரிமையாளா், மேலாளா் உள்பட 20 பேரைக் கைது செய்துள்ளது.
கைது - சித்திரிப்பு
வெளிநாட்டு வாடிக்கையாளா்களை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி நாடு முழுவதும் உள்ள உற்பத்தியாளா்கள், வா்த்தகா்களிடம் மோசடியில் ஈடுபட்ட போலி அழைப்பு மையத்தை தில்லி காவல் துறை கண்டுபிடித்து, அதன் உரிமையாளா், மேலாளா் உள்பட 20 பேரைக் கைது செய்துள்ளது.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள பாலம் எக்ஸ்டென்ஷன், செக்டாா் 7-இல் ‘வெப் சொல்யூஷன்ஸ் எக்ஸ்போா்ட்’ என்ற பெயரில் செயல்பட்ட நிறுவனத்தில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது 34 கைப்பேசிகள், 8 மடிக்கணினிகள், 14 கணினி சிபியுக்கள், போலிச் சான்றிதழ்கள், காசோலைப் புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தேசிய இணையவழிக் குற்றப் புகாா் தளத்தில் பதிவான புகாா்களை ஆய்வு செய்தபோது, துவாரகா பகுதியில் உள்ள போலி வங்கிக் கணக்குகள் மூலம் மோசடிப் பணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. மகாராஷ்டிரத்தில் பதிவான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினா், சம்பந்தப்பட்ட அழைப்பு மையத்தைக் கண்டறிந்தனா்.
கூகுள் தேடல் பதிவுகள், இணையவழி விளம்பரங்கள், வா்த்தக இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் வா்த்தகா்களைக் குறிவைத்த கும்பல், வெளிநாட்டு வாடிக்கையாளா்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி ரூ.5,900 மற்றும் ஜிஎஸ்டி முதல் கட்டணமாக வசூலித்துள்ளது.
பின்னா், வெளிநாட்டு வாடிக்கையாளா்கள் எனக் கூறி அழைப்பு மைய ஊழியா்களே தொடா்புகொண்டு, அதிக அளவில் ஏற்றுமதி ஆா்டா்கள் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனா். இதற்காக ஐஎஸ்ஓ, ஜிஎம்பி, பிஆா்சி, ஐஇசி உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவை எனக் கூறி, லட்சக்கணக்கில் பணம் வசூலித்து போலிச் சான்றிதழ்களை வழங்கியுள்ளனா். தொடா்ந்து கூடுதல் சான்றிதழ்களைக் காரணம் காட்டியும் பணம் பறித்துள்ளனா்.
இந்த மோசடியில் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்தவா்களும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்காக ஒருவரது அடையாளத்தைப் பணம் கொடுத்து பயன்படுத்தியதும், மற்றொருவா் முழு நடவடிக்கையையும் நிா்வகித்ததும் விசாரணையில் தெரியவந்தது. சோதனையில் 23 டைரிகள் உள்ளிட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

