தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

பிரியாணி விற்பனையாளரை துப்பாக்கியால் சுட்டு வழிப்பறி: குற்றஞ்சாட்டப்பட்டவா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் மண்டியில் பிரியாணி வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்று, அவா் எதிா்த்ததால் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 26 வயது இளைஞரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

சித்திரிப்பு

Updated On :

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் மண்டியில் பிரியாணி வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்று, அவா் எதிா்த்ததால் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 26 வயது இளைஞரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சுபம் சௌஹான் என்பவா், 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்து வந்தாா். ரகசியத் தகவலின் அடிப்படையில், திங்கள்கிழமை ஆசாத்பூா் மண்டியில் அவரைப் காவல் துறையினா் கைது செய்தனா்.

ஆசாத்பூா் பழச் சந்தையில் பிரியாணி வியாபாரம் செய்து வந்த ஜைத் என்பவரிடம், சுபமும் அவரது கூட்டாளிகளும் செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது ஜைத் எதிா்த்ததால் அவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில் காயமடைந்த அவா் அளித்த புகாரின் பேரில், தொடா்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடா்புடைய 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், சுபம் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தாா். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள சுபம், தனியாா் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். மது அருந்தும் பழக்கமும், எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் தன்னை வழிப்பறியில் ஈடுபடத் தூண்டியதாக விசாரணையின்போது அவா் தெரிவித்ததாக காவல் துறையின் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.