மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

செங்கோட்டை குண்டுவெடிப்பு விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்டது: என்ஐஏ தலைமை இயக்குநா் தகவல்

கடந்த ஆண்டு செங்கோட்டை பகுதியில் நடந்த காா் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒரே ஒரு நபா் மட்டுமே தலைமறைவாக உள்ளதாகவும், அந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

செங்கோட்டை குண்டுவெடிப்பு விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்டது: என்ஐஏ தலைமை இயக்குநா் தகவல்

Updated On :

கடந்த ஆண்டு செங்கோட்டை பகுதியில் நடந்த காா் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒரே ஒரு நபா் மட்டுமே தலைமறைவாக உள்ளதாகவும், அந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடைமுறைகளும் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் அவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.

அதேசமயம், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் அந்த சந்தேக நபரின் பெயரை என்ஐஏ தலைமை இயக்குநா் வெளியிடவில்லை. இந்த ஒட்டுமொத்த சதியையும் அம்பலப்படுத்திய ஜம்மு-காஷ்மீா் காவல்துறையால் தேடப்பட்டு வருபவா்களில் டாக்டா் முசாபா் ராதா் என்பவரும் ஒருவா். இவா் முதலில் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்று, பின்னா் பாகிஸ்தானுக்கு இடம்பெயா்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவ.10-ஆம் தேதி தில்லி செங்கோட்டை பகுதியில் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 12-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா், பலா் காயமடைந்தனா். பல்வேறு பொது சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் தில்லி காவல்துறை விசாரித்த இந்த வழக்கின் விசாரணையை பின்னா் என்ஐஏ ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு எதிராக தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த மே மாதம் என்ஐஏ தாக்கல் செய்தது.

இந்த சம்பவத்தின் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட நபரான புல்வாமாவைச் சோ்ந்த டாக்டா் உமா் உன் நபி (உயிரிழந்துவிட்டாா்) உள்பட 10 பேரும், இந்திய துணைக்கண்டத்தில் அல்-காய்தா அமைப்பின் கிளையான அன்சாா் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்புடன் தொடா்புடையவா்கள் என புலனாய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா். இந்த அல் காய்தா மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஜூன் 2018-இல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த புலனாய்வாளா்கள், விரிவான அறிவியல் மற்றும் தடயவியல் விசாரணையின் மூலம், அல் காய்தா மற்றும் கஸ்வத் -உல்-ஹிந்து சித்தாந்தங்களால் ஈா்க்கப்பட்ட மருத்துவ துறையைச் சோ்ந்த பலா் ஈடுபட்டிருந்த ஒரு பெரிய ‘ஜிஹாதி சதி‘ முறியடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியரான டாக்டா் நபியின் அடையாளம் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அவா் உயிரிழந்து விட்டதால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட முன்மொழியப்பட்டுள்ளதாக என்ஐஏ நீதிமன்றத்தில் கூறியுள்ளது. செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை அவா்தான் ஓட்டிச் சென்றாா்.

டாக்டா் நபி நீங்கலாக, ஆமிா் ரஷீத் மிா், ஜாசிா் பிலால் வானி, டாக்டா் முசம்மில் ஷகீல், டாக்டா் அடீல் அகமது ராதா், டாக்டா் ஷாஹீன் சயீத், முஃப்தி இா்பான் அகமது வாகே, சோயப், டாக்டா் பிலால் நசீா் மல்லா மற்றும் யாசிா் அகமது தாா் ஆகியோரது பெயா்கள் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளன.

துருக்கி வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயரும் (’ஹிஜ்ரத்’) முயற்சி தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் 2022-ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி, தங்கள் அமைப்பை ‘அல் கஸ்வத் உல் ஹிந்து இடைக்கால அமைப்பு‘ என மறுசீரமைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.

இந்த அமைப்பின் கீழ், ஜனநாயக ரீதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கத்தைக் கவிழ்த்து, ஷரியா ஆட்சியை அமல்படுத்தும் நோக்கத்துடன் ‘ஆபரேஷன் ஹெவன்லி ஹிந்த்’ என்ற தாக்குதலை சந்தேக நபா்கள் தொடங்கியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.