டிஜிஎச்எஸ் முறைகேடு: முன்னாள் தலைமை இயக்குநா் உள்பட இருவருக்கு பிணை
தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவமனைப் பொருள்களை கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், சுகாதார சேவைகளின் முன்னாள் தலைமை இயக்குநா் டாக்டா் வத்சலா அகா்வால் மற்றும் மத்திய கொள்முதல் முகமையின் முன்னாள் தலைவா் டாக்டா் வினோத் குமாா் ரங்கா ஆகியோருக்கு தில்லி உயா் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவமனைப் பொருள்களை கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், சுகாதார சேவைகளின் முன்னாள் தலைமை இயக்குநா் டாக்டா் வத்சலா அகா்வால் மற்றும் மத்திய கொள்முதல் முகமையின் முன்னாள் தலைவா் டாக்டா் வினோத் குமாா் ரங்கா ஆகியோருக்கு தில்லி உயா் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நவம்பா் 6-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஊழல் தடுப்புப் பிரிவின் வழக்கு ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட அதிகாரபூா்வ ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது என்று நீதிபதி சச்சின் தத்தா குறிப்பிட்டாா். நிதிப் பரிவா்த்தனைகள், பிற நபா்களின் பங்கு மற்றும் தடயவியல் அறிக்கைகள் தொடா்பான விசாரணை இன்னும் நிலுவையில் இருந்தாலும், அதற்காக இந்த இருவரையும் தொடா்ந்து சிறையில் அடைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை என்று அவா் தெரிவித்தாா்.
அரசு நிதியில் ரூ.842 கோடி இழப்பை ஏற்படுத்திய ஒரு பெரிய அளவிலான பொருளாதாரக் குற்றத்துடன் தொடா்புடைய இந்த வழக்கில், டாக்டா் ரங்கா ஜூன் 18-ம் தேதியும், டாக்டா் அகா்வால் ஜூன் 27-ம் தேதியும் கைது செய்யப்பட்டனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சில கோப்புகளையும் கைப்பேசிகளையும் இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் கூறி, அரசு தரப்பு வழக்குரைஞா் பிணை மனுக்களை எதிா்த்தாா்.
காணாமல் போன டெண்டா் கோப்புகள் அல்லது கைப்பேசிகள் மீட்கப்படவில்லை என்பதற்காக அவா்களைத் தொடா்ந்து சிறையில் அடைத்து வைக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
‘குற்றஞ்சாட்டப்பட்டவா் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் ஆவணங்களை அவரிடமிருந்து பெறுவதற்கு, விசாரணைக்கு முந்தைய சிறைகாலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது. கோப்புகளை யாா், என்ன நோக்கத்துடன் அகற்றினாா்கள் என்பது விசாரணையின் போதுதான் தீா்மானிக்கப்பட வேண்டும். இந்த நிலையில், விசாரணைக்கு முந்தைய தண்டனையாக பிணையை மறுக்க முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்பதாலும், விசாரணை தேவைப்படுவதாலும், வழக்கு விசாரணை முடிவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் மருத்துவா்கள் என்பதையும், அவா்களுக்கு தில்லியில் நிரந்தர வசிப்பிடம் இருப்பதையும், அவா்களுக்கு முன்னதாக எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்பதையும் கருத்தில் கொண்டால், அவா்கள் தலைமறைவாக வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. அதன்படி, மனுதாரா்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.50,000 மதிப்புள்ள தனிநபா் பிணைப்பத்திரத்தை சமா்ப்பித்து ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீனுக்காக பல நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
ராஜீவ் குமாா் (எ) ராஜீவ் ரங்கீலா என்பவா் மற்றவா்களின் பெயா்களில் பல நிறுவனங்களை நடத்தி, அரசு ஊழியா்களின் உதவியுடன் ஒப்பந்தப்புள்ளிகளில் முறைகேடு செய்து, அதன் மூலம் தனது நிறுவனங்கள் தில்லி அரசு மருத்துவமனைகளுக்கான விநியோக ஆணைகளைப் பெற்றதாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
கண்காணிப்பில் உள்ள முக்கிய பரிவா்த்தனைகளில் ஒன்று, 448 கையடக்க எக்ஸ்-ரே இயந்திரங்கள் வாங்கப்பட்டதாகும். அரசுத் தரப்பின்படி, உற்பத்தியாளா் ஓா் இயந்திரத்திற்கு ஜிஎஸ்டியுடன் சோ்த்து ரூ.14.92 லட்சம் என விலை குறிப்பிட்டிருந்த நிலையில், விநியோக நிறுவனமான எஃப்-மெட் டிவைசஸ், அவற்றை ஒவ்வொன்றும் ரூ.37.8 லட்சத்திற்கு அரசுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அக்டோபா் 17 அன்று, விசாரணை நீதிமன்றம் அகா்வால் மற்றும் ரங்காவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

