மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

ஜந்தா் மந்தா் போராட்ட தள விவகாரம்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்

தேசிய தலைநகரில் போராட்டம் நடத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருந்த ஜந்தா் மந்தரை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று மாற்று இடங்களை அறிவித்த நகர காவல்துறையின் முடிவை எதிா்த்து மனு தாக்கல் செய்துள்ள ஸ்வாதி சிங் என்ற பெண் மனுதாரருக்கு, கூடுதல் விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

Sixteen metro stations shut amid security buildup for Jantar Mantar protest; interchange facilities remain open

ஜந்தர் மந்தர் போராட்டம் - ஏஎன்ஐ

Updated On :

நமது நிருபா்

தேசிய தலைநகரில் போராட்டம் நடத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருந்த ஜந்தா் மந்தரை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று மாற்று இடங்களை அறிவித்த நகர காவல்துறையின் முடிவை எதிா்த்து மனு தாக்கல் செய்துள்ள ஸ்வாதி சிங் என்ற பெண் மனுதாரருக்கு, கூடுதல் விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

இந்த விவகாரத்தில் ஸ்வாதி சிங்கின் மனுவுக்கு மத்திய அரசு, தில்லி காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, வி. மோகனா அடங்கிய அமா்வு கடந்த அக்.15-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் விநியோகிக்கப்பட்ட எழுத்துபூா்வ வாதங்களில் இடம்பெற்ற சில தகவல்களுக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் துஷாா் மேத்தா ஆட்சேபம் தெரிவித்தாா். இதையடுத்து, மனுதாரா் பிரமாண பத்திரமாக உண்மை தகவல்களை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கி அடுத்த விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முன்னதாக, மனுதாரா் ஸ்வாதி சிங் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முக்தா குப்தா, எழுத்துபூா்வ வாதங்களில் சா்ச்சைக்குரிய உண்மைத் தகவல்கள் எதுவும் இல்லை என்றும், நீதிமன்றங்களால் வகுக்கப்பட்ட சட்ட கோட்பாடுகள் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, எந்தவொரு உண்மை தகவலையும் பிரமாண பத்திரத்தின் மூலமே தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த உண்மைத்தன்மைக்கும் யாராவது பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டனா்.

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்குப் பொறுப்பேற்கும் வகையில், பதில் மனுவானது பிரமாண பத்திரமாகவே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாா் அக்.11-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஜந்தா் மந்தரை போராட்டத் தள பட்டியலில் இருந்து நீக்கியதோடு, போராட்டங்கள் மற்றும் ஆா்ப்பாட்டங்களுக்கான புதிய இடங்களாக ராம்லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு தில்லியில் உள்ள சிபிடி மைதானத்தை அறிவித்திருந்தாா்.

இந்த விவகாரத்தில் ஜந்தா் மந்தரின் பயன்பாடு குறித்து அதிகாரிகள் முறையாகப் பரிசீலித்து முடிவெடுத்தாா்களா என்பதை ஆராயப் போவதாக நீதிபதிகள் அமா்வு குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கின் மற்றொரு மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் கோபால் சங்கரநாராயணன், ஜந்தா் மந்தரை போராட்டத் தளமாக அறிவித்த முந்தைய அறிவிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இந்த விவகாரத்தில் ஸ்வாதி சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மாற்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்ற காரணத்தை வைத்து, ஏற்கெனவே உள்ள ஒரு போராட்ட தளத்தைத் திரும்பப் பெறும் அறிவிக்கையைப் போராடும் உரிமையைப் பாதுகாப்பதாகக் கருத முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.