முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு: கிருஷி பவன் மசூதி தொடா்பான மனுக்கள் மீது இன்று விசாரணை

சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு: கிருஷி பவன் மசூதி தொடா்பான மனுக்கள் மீது இன்று விசாரணை

தில்லி உயா் நீதிமன்றம்

Updated On :

சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிருஷி பவன் வளாகத்திற்குள் உள்ள, நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மசூதியின் எதிா்காலம் குறித்த இரண்டு மனுக்களை தில்லி உயா் நீதிமன்றம் திங்கட்கிழமை (இன்று) விசாரிக்க உள்ளது.

காதிமி மஸ்ஜித் அல்லது மஸ்ஜித் கிருஷி பவனின் பராமரிப்புக் குழு மற்றும் பக்தரான முகமது யாசிா் ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி அனிஷ் தயால் விசாரிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பராமரிப்புக் குழுவின் மனுவுக்குப் பதிலளித்த மத்திய அரசு, ஒரு அரசு அலுவலக வளாகத்தின் எல்லைக்குள் ஒரு நிரந்தர மதக் கட்டமைப்பை நிறுவுவது அனுமதிக்க முடியாதது மற்றும் அரசு சொத்தின் ‘மதச்சாா்பற்ற‘ தன்மைக்கு முரணானது என்பதால், மசூதி அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

நாட்டின் ஆட்சிக்கு அத்தியாவசியமான உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் பொருட்டு, சாஸ்திரி பவன் மற்றும் கிருஷி பவன் அமைந்துள்ள மனைகளில் பொது மத்திய செயலகத்திற்கான கட்டிடங்களை மறுவடிவமைத்து புனரமைக்க மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு பெருந்திட்டம் வழிவகை செய்கிறது என்றும், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக காதிமி மசூதி அகற்றப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

கிருஷி பவன் வளாகத்திற்குள் அமைந்துள்ள வக்ஃப் சொத்தான/காதிமி மசூதியைத் தொடா்ந்து தக்கவைப்பது குறித்து நியாயமான, வெளிப்படையான மற்றும் காரணத்துடன் கூடிய பரிசீலனையை முதலில் மேற்கொள்ளாமல், அதனை இடிப்பது, பிரிப்பது, அகற்றுவது அல்லது தொந்தரவு செய்வதிலிருந்து அதிகாரிகளைத் தடுக்குமாறு மஸ்ஜித் கிருஷி பவனின் பராமரிப்புக் குழு உத்தரவுகளைக் கோரியுள்ளது.

பல பத்து ஆண்டுகளாக அரசு ஊழியா்கள் மற்றும் சுற்றியுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பிறா் தொழுகை நடத்தும் இடமாக காதிமி மசூதி செயல்பட்டு வருவதால், புதிதாகக் கட்டப்படவிருக்கும் கட்டிடங்களில் தொழுகை வசதியை ஏற்படுத்தக் கோருவதாக மனுதாரரின் வழக்குரைஞா் முன்னதாகக் கூறியிருந்தாா்.

செயல்பாட்டில் உள்ள மசூதியை உடனடி இடிப்பிலிருந்து பாதுகாக்க உத்தரவுகள் கோரியுள்ளாா் யாசிா். மத நிறுவனங்களை இடிப்பதற்கு ‘மதச்சாா்பின்மை‘ மத்திய அரசுக்கு எந்தவொரு சுதந்திரமான நிா்வாக அதிகாரத்தையும் வழங்கவில்லை என்று அவா் கூறியுள்ளாா்.

பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் இல்லை என்றாலும், கிருஷி பவன் வளாகத்திற்குள் உள்ள 266 சதுர யாா்டு மசூதியை இடிப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.