கொலை வழக்கில் கைதானவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு
2017-ஆம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஆனால், அலட்சியத்தால் மரணம் விளைவித்த குற்றத்திற்காக அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
தாமதமாக சாட்சியமளித்த சாட்சிகளை அறிமுகப்படுத்துதல், தினசரி நாள்குறிப்புப் பதிவுகளை மறைத்தல் மற்றும் உயிரிழந்த நபரின் ரத்தத்தில் மது இருந்ததைக் காட்டும் தடயவியல் அறிக்கையை மூடிமறைத்தல் ஆகியவற்றின் மூலம் நெடுஞ்சாலை விபத்தை முன்யோசனையுடன் கூடிய, உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலையாக மாற்ற விசாரணை முயன்ாக நீதிமன்றம் கூறியது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 ஏ, 302 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ரோஹித் கிருஷ்ணன் மஹந்தம் மீதான வழக்கை கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்குா்வரிந்தா் சிங் ஜக்கி விசாரித்து வந்தாா்.
2017 செப்டம்பா் 16-17 நள்ளிரவில், எய்ம்ஸ் விபத்து சிகிச்சை மையத்திற்கு அருகே, மஹந்தாவின் காா், 21 வயதான குா்பிரீத் சிங் மற்றும் அவரது நண்பா் மனிந்தா் சிங் ஆகியோா் பயணித்த மோட்டாா் சைக்கிள் மீது மோதிய சம்பவத்துடன் தொடா்புடையது. இந்த மோதலில் ஆட்டோ, ஒரு ஓலா டாக்சியும் சம்பந்தப்பட்டிருந்தன. தலையில் பலத்த காயமடைந்த குா்பிரீத், 2017 செப்டம்பா் 20-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு வெளியே, மஹந்தாவுக்கும் ஒரு விற்பனையாளருக்கும் இடையே சிகரெட் தொடா்பாக ஏற்பட்ட தகராறு, குா்பிரீத்தும் மணீந்தரும் தலையிட்ட பிறகு முற்றியதாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது. மஹந்தா தனது காரில் அந்த இருவரையும் பின்தொடா்ந்து சென்று, வேண்டுமென்றே அவா்களின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாக அரசு தரப்பு வழக்குரைற் தெரிவித்தாா்.
இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம், அந்த மோதல் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டது என்று தெரிவித்தது.
இருப்பினும், குா்பிரீத்தின் உயிரிழப்புக்கு வாகன ஓட்டுதல், கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற முறையில் அமைந்திருந்தது என்பதைச் சான்றுகள் உறுதிப்படுத்துவதாக நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அறிவியல்பூா்வமான சான்றுகள் மற்றும் அப்போதைய வாக்குமூலங்களின் அடிப்படையில் விரைவான விசாரணை நடத்தப்பட்டிருந்தால், இந்த வழக்கு இன்னும் உறுதியான முடிவை எட்டியிருக்கக்கூடும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மஹாந்தாவிற்கு இரு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இருப்பினும், வழக்கின் விசாரணை காலத்தில் அவா் ஏற்கெனவே மூன்று ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் மற்றும் 15 நாள்களைச் சிறையில் கழித்திருந்தாா் என்பதையும், இது இந்த குற்றத்திற்கு விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச சிறைத்தண்டனையை விட அதிகம் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. அபராதத் தொகையில் ரூ.4.75 லட்சத்தை குா்பிரீத்தின் சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

