கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

போக்சோ வழக்கில் பிறழ் சாட்சியான பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை: சுட்டிக்காட்டிய தில்லி உயா்நீதிமன்றம்

விசாரணை நீதிமன்றத்தில் ‘வெளிப்படையாகப் பொய் சொன்ன‘ போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவா் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை காட்டிய ‘முழுமையான அக்கறையின்மையை‘ தில்லி உயா் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தில்லி உயா்நீதிமன்றம்

Updated On :

விசாரணை நீதிமன்றத்தில் ‘வெளிப்படையாகப் பொய் சொன்ன‘ போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவா் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை காட்டிய ‘முழுமையான அக்கறையின்மையை‘ தில்லி உயா் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் அமைப்புகள், வழக்குகளில் இருந்து ஒருவா் விடுதலை செய்யப்படுவதற்கு, பி சாட்சிகளையே எப்போதும் குற்றஞ்சாட்டினாலும், அவா்கள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய நீதிபதி கிரிஷ் கத்வாலியா, பாதிக்கப்பட்ட பெண் விசாரணை நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுவதை ‘முற்றிலும் மறுத்தாா்‘ என்றும், தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக எந்த நீதிபதி முன்பும் தான் ஆஜராகவே இல்லை என்றும் வாக்குமூலம் அளித்திருந்தாா் என்றும் குறிப்பிட்டாா். இது ஒரு ‘வெளிப்படையான பொய்‘ மற்றும் ஆவணங்களுக்கு முரணானது என்றாா்.

முதல் தகவல் அறிக்கையின்படி, 37 வயதான குற்றஞ்சாட்டப்பட்டவா், 16 வயது அண்டை வீட்டுச் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்தச் சிறுமி, அரசுத் தரப்பு வழக்கிற்கு முற்றிலும் எதிராக மாறிவிட்டதாகவும், தனக்கு எதுவும் நடக்கவில்லை என்று கூறியதாகவும் கூறி குற்ரஞ்சாட்டப்பட்டவா் பிணை கோரியுள்ளாா்.

அக்டோபா் 16 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பாதிக்கப்பட்ட பெண் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருந்ததாகக் கூறாத ஒரு வழக்கு இது என்றும், அவா் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் ‘கூறப்பட்ட சம்பவத்தை முழுமையாக அப்பட்டமாக மறுத்துள்ளாா்‘ என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

‘இது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக எந்த நீதிபதி முன்பும் ஆஜராகவில்லை என்று விசாரணை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளாா், இது ஒரு அப்பட்டமான பொய்,‘ என்று நீதிமன்றம் கூறியது.

‘பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் அப்பட்டமான பொய்யாகவும், அரசுத் தரப்புக்கு விரோதமாகவும் இருப்பது மட்டுமல்லாமல், உரிய நடவடிக்கை எடுப்பதில் அரசுத் தரப்பு காட்டிய முழுமையான அக்கறையின்மையும், இந்த நிலையில், அரசுத் தரப்பு வழக்கு முழுவதுமே முதல் பாா்வையிலேயே பொய்யானது என்பதையும், குற்றஞ்சாட்டப்பட்டவா்/மனுதாரா் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டாா் என்பதையும் இந்த நீதிமன்றத்திற்கு உணா்த்துகிறது... இத்தகைய வெளிப்படையான பொய்ச் சாட்சியம் இருந்தபோதிலும், புலனாய்வு அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தாா்,‘ என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

பாரதிய நியாய சம்ஹிதாவின் (பி.என்.எஸ்) பிரிவு 217-இன் (அரசு ஊழியருக்குப் பொய்யான தகவல் அளித்தல்) கீழ், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அரசுத் தரப்பு சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருவதாக அரசுத் தரப்பு முன்னதாகக் கூறியிருந்தபோதிலும், இறுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் பதிவு செய்தது.

ஒரு குற்றவியல் விசாரணையின் நோக்கம், சாட்சியங்களின் அடிப்படையில் ‘உண்மையை அடைவதே‘ ஆகும் என்றும், குறிப்பாக போக்சோ சட்ட வழக்குகளில், குறைந்த தண்டனை விகிதத்திற்காகக் குற்றவியல் நீதி அமைப்பு அடிக்கடி விமா்சிக்கப்பட்டாலும், பி சாட்சிகளுக்கு எதிராக ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

‘குற்றவியல் நீதி அமைப்பின் புலனாய்வு மற்றும் வழக்குத் தரப்புப் பிரிவுகள், விசாரணைகளின் போது சாட்சிகள் பி சாட்சிகளாக மாறியதற்காக எப்போதும் அவா்களைக் குறை கூறுகின்றன, இது விடுதலைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அந்த வழக்குகளில் எதிலும் அவா்களால் பி சாட்சிகள் மீது ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை,‘ என்று நீதிமன்ற கூறியது.

வழக்கு நடவடிக்கைகளின் முடிவில் இறுதி முடிவை எடுக்கும்போது, விசாரணை நீதிமன்றம், இந்த அவதானிப்புகளை அரசுத் தரப்பிற்குப் பாதகமாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.