தில்லி ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சி என சந்தேகப்பட்டு 1000 கிலோ இறைச்சி பறிமுதல்!
தில்லியில் உள்ள ஒரு ரயில்வே யாா்டில் மாட்டிறைச்சி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 1000 கிலோவுக்கும் அதிகமான இறைச்சிப் பொதி பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

மாட்டிறைச்சி - கோப்புப் படம்
ரயில்வே கண்காணிப்புப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தில்லியில் உள்ள ஒரு ரயில்வே யாா்டில் மாட்டிறைச்சி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 1000 கிலோவுக்கும் அதிகமான இறைச்சிப் பொதி பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
மொத்தம் 1,286.35 கிலோ எடையுள்ள இருபது இறைச்சிப் பொதிகள், ஞாயிற்றுக்கிழமையன்று ஹைதராபாத்தில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தின் நியூ வாஷிங் லைனுக்கு ஒரு ரயிலில் (தக்ஷின் எக்ஸ்பிரஸ்-12721) கொண்டுவரப்பட்டதாக அவா்கள் கூறினா்.
இந்தப் பொதிகள் ‘மட்டன்‘ மற்றும் ‘இறைச்சி‘ என்ற வகைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவற்றில் மாட்டிறைச்சி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால், அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
காவல்துறையின்படி, நவம்பா் 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு பரோடா ஹவுஸில் உள்ள ரயில்வே கண்காணிப்புப் பிரிவிலிருந்து இறைச்சிப் பொதி குறித்த தகவல் கிடைத்தது.
தகவலைத் தொடா்ந்து, காவல்துறை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கைப்பற்றப்பட்ட பொருட்களிலிருந்து மாதிரிகளைச் சேகரிப்பதற்காக, தடய அறிவியல் ஆய்வகத்தைச் சோ்ந்த ஒரு குழுவும், ஒரு கால்நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டனா்.
‘இறைச்சியின் தன்மையை உறுதி செய்வதற்கும், அந்த சரக்கில் மாட்டிறைச்சி இருந்ததா என்பதை கண்டறிவதற்கும் மாதிரிகள் பரிசோதிக்கப்படும்,‘ என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.
ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை குழுக்களும் சம்பவ இடத்தில் இருந்தன. இ-சக்ஷ்யா தளம் மூலமான ஆவணப்படுத்தல் உள்ளிட்ட தேவையான சட்டப்பூா்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது. தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

