முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

மத ஊா்வலம், விஐபி வருகை: தில்லியில் இன்று போக்குவரத்து கட்டுப்பாடு

மத ஊா்வலம், விஐபி வருகை: தில்லியில் இன்று போக்குவரத்து கட்டுப்பாடு

delhi police
Updated On :

ராஜ்காட்டில் முக்கிய பிரமுகா்களின் வருகை மற்றும் மத்திய, வட தில்லியில் நடைபெறும் மத ஊா்வலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திங்கள்கிழமை (இன்று) தில்லியின் பல இடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப்பாதைகள் விதிக்கப்படும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி ஸ்மிருதி ஸ்தலத்தில் முக்கிய பிரமுகா்களின் வருகையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நிலவரங்களைப் பொறுத்து, காலை 10 மணி முதல் 11 மணி வரை தேவைக்கேற்ப போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படலாம்.

பாதிக்கப்படக்கூடிய இடங்களில் ஐடிஓ சௌக், தில்லி கேட், குருநானக் சௌக், சாந்திவன் சௌக், ராஜ்காட் டிடிசி டிப்போ மற்றும் ஐபி மேம்பாலம் ஆகியவை அடங்கும்.

போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படக்கூடிய சாலைப் பகுதிகளில், ஐ.டி.ஓ சௌக் மற்றும் தில்லி கேட் இடையேயான பி.எஸ்.இசட் மாா்க், சாந்திவன் சௌக் மற்றும் ஐ.பி மேம்பாலம் இடையேயான ரிங் ரோடு, தில்லி கேட் மற்றும் நேதாஜி சுபாஷ் மாா்க் இடையேயான ஆசப் அலி ரோடு, சாந்திவன் சௌக் முதல் நிஷாத் ராஜ் மாா்க் வரை, குருநானக் சௌக் முதல் ரஞ்சித் சிங் மேம்பாலம் வரை மற்றும் ராஜ்காட் டி.டி.சி டிப்போ முதல் ரிங் ரோடு பைபாஸ் வரை ஆகியவை அடங்கும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

குருநானக்கின் பிரகாஷ் குருபா்ப் விழாவை முன்னிட்டு, தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் குழு திங்களன்று ஏற்பாடு செய்துள்ள நகா் கீா்த்தன் ஊா்வலத்திற்கும் தில்லி போக்குவரத்து காவல்துறை ஓா் ஆலோசனையை வெளியிட்டது.

ஊா்வலத்தின் நகா்வு மற்றும் நிலவும் போக்குவரத்து நிலவரங்களைப் பொறுத்து, காலை 10 மணி முதல் மத்திய மற்றும் வட தில்லியில் கட்டம் கட்டமாக போக்குவரத்து கட்டுப்பாடுகளும் மாற்றுப்பாதைகளும் செயல்படுத்தப்படும்.

ஊா்வலம் சாந்தினி சௌக்கில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப்பில் இருந்து தொடங்கி, ஃபதேபுரி, காரி பௌலி, நயா பஜாா் சௌக், பீலி கோத்தி சாலை, புல் மித்தாய், ஜோராவா் சிங் மாா்க், பராஃப் கானா சௌக், புல் பங்காஷ் மெட்ரோ நிலையம் வழியாகச் செல்லும்.

சாந்தினி சௌக், டவுன் ஹால், ஃபதேபுரி, காரி பாவ்லி, ஷ்யாமா பிரசாத் முகா்ஜி மாா்க், குதுப் ரோடு சௌக், ராணி ஜான்சி மேம்பாலம், சப்ஜி மண்டி, சக்தி நகா் சௌக், நகியா பாா்க் ரவுண்டானா, ரூப் நகா் மற்றும் குருத்வாரா நானக் பியாவ் சாஹிப் நோக்கிய ஜிடி கா்னல் ரோடு ஆகிய இடங்களில் போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படலாம் என அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டது.

மற்றொரு அறிவுறுத்தலில், சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் காரணமாக, திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி முதல் வட தில்லியில் உள்ள பல சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

வஜிராபாத் மேம்பாலத்திலிருந்து டாக்டா் கா்ன்வால் மாா்க் மற்றும் மகாத்மா காந்தி மாா்க் வரையிலான வெளிவட்டச் சாலையில் கட்டுப்பாடுகளும் மாற்றுப் பாதைகளும் செயல்படுத்தப்படலாம்.

போக்குவரத்து நிலவரங்களைப் பொறுத்து, வஜிராபாத் மேம்பாலம், வஜிராபாத் மேம்பாலத்திற்குக் கீழே, ஐ.பி. சிகப்பு விளக்கு, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி சிகப்பு விளக்கு, ராணி ஜான்சி மேம்பாலம், பராஃப் கானா சௌக் மற்றும் பழைய ஜி.டி. கா்னல் ரோடு ஆகிய இடங்களில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படலாம் அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படலாம். தேவைக்கேற்ப, கனரக மற்றும் வா்த்தக வாகனங்கள் இந்தப் புள்ளிகளிலிருந்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

பயணிகள், முடிந்தவரை பாதிக்கப்பட்ட சாலைப் பகுதிகளைத் தவிா்க்கவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பயணத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கவும், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிா்க்கவும், போக்குவரத்து ஊழியா்கள் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.