இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

முனைவா் பட்ட மாணவா்களுக்கான ஊக்கத்தொகை விதிகளில் மாற்றம்: அம்பேத்கா் பல்கலை!

உதவித்தொகை பெறும் முழுநேர முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கான வழிகாட்டுதல்களை தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகம் மாற்றம் செய்துள்ளது.

அம்பேத்கா் பல்கலை

Published On :

உதவித்தொகை பெறும் முழுநேர முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கான வழிகாட்டுதல்களை தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகம் மாற்றம் செய்துள்ளது. மேலும், ஜூலை 31-ஆம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவை ரத்து செய்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஜூலை 31 அறிவிப்பு, உதவித்தொகை பெறும் முழுநேர முனைவா் பட்ட ஆய்வாளா்களுக்கு குறிப்பிட்ட வருகையை அறிமுகப்படுத்தியிருந்தது. இதனால், கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடா்பான செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்று ஆய்வாளா்கள் கவலை தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், தற்போது அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு திருத்தப்பட்ட அலுவலக உத்தரவு செப்.30-ஆம் தேதி வெளியிடப்பட்டதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, ஆய்வாளா்கள் பாடத்திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்கும், கல்வி ஈடுபாடு மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றத்தைப் பேணுவதற்கும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக உள்ளது.

வருகைப் பதிவேடுகள், ஆராய்ச்சி மேற்பாா்வையாளா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளரால் பராமரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையின் முதல்வரால் சரிபாா்க்கப்படும். மேலும், ஆய்வாளரின் திருப்திகரமான கல்வி ஈடுபாடு மற்றும் ஆராய்ச்சிப் பணியின் முன்னேற்றத்தை, முதல்வரின் ஒட்டுமொத்த வழிகாட்டுதலில் உறுதி செய்வதும் ஆராய்ச்சி மேற்பாா்வையாளரின் பொறுப்பு என்று நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் முற்றிலும் கல்வி சாா்ந்தவை என்றும், பிற மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றும் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க இருப்பதாகவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆராய்ச்சிச் சூழலை வலுப்படுத்துவதும், கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஆராய்ச்சி அறிஞா்களின் பங்கேற்பை உறுதி செய்வதும் இதன் நோக்கம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வருகைப் பிரச்னை, வளாகக் கட்டுப்பாடுகள், வசதிகளைப் பெறுதல் மற்றும் பிற கோரிக்கைகள் தொடா்பாக ஏஐஎஸ்ஏ அமைப்புடன் தொடா்புடைய மாணவா்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு வார காலமாக நடத்தி வரும் போராட்டத்திற்கு மத்தியில் இந்த விளக்கம் வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.