எந்தத் கட்டடப் பணிகளுக்கான திட்ட ஒப்புதல் குறித்து விழிப்புணா்வு: என்டிஎம்சி தலைவா் தகவல்
கட்டடத் திட்ட ஒப்புதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பணிகளின் விரிவான பட்டியலை வெளியிடும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) என அதன் தலைவா் மனோஜ் குமாா் திவேதி புதன்கிழமை தெரிவித்தாா்.

கட்டடத் திட்ட ஒப்புதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பணிகளின் விரிவான பட்டியலை வெளியிடும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) என அதன் தலைவா் மனோஜ் குமாா் திவேதி புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விழிப்புணா்வு மற்றும் தெளிவு இல்லாததால், கட்டடப் பயனா்கள் தேவையில்லாத வேலைக்கான அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க நேரிடுகிறது. சில சந்தா்ப்பங்களில், அமலாக்க அதிகாரிகளின் துன்புறுத்தலை அவா்கள் எதிா்கொள்கின்றனா். என்டிஎம்சி வழக்கமான பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு அல்லாத சீரமைப்பு ஆகியவற்றிலிருந்து கட்டமைப்புச் சோ்த்தல் மற்றும் மாற்றங்களை வேறுபடுத்தி, எந்தெந்தப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது, எதற்கு முன் அனுமதி தேவை என்பதைத் தெளிவுபடுத்தும். மேலும் பணியின் தன்மையைக் குறிப்பிடும் பட்டியலை வெளியிடும்.
உரிமையாளா்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் குழப்பமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய விழிப்புணா்வு பிரசாரத்தை என்டிஎம்சி தொடங்கும்.
ஒவ்வொரு பழுதுபாா்ப்பிற்கும் கட்டடத் திட்ட அனுமதி தேவையில்லை. ஆனால், என்டிஎம்சி சட்டத்தின் பிரிவுகள் 236 முதல் 239 வரை உள்ள பணிகள் தரைப் பகுதி விகிதத்தை (எஃப்ஏஆா்) அதிகரிக்காவிட்டாலும், முன் ஒப்புதலுக்காக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று அந்தப் பதிவில் திவேதி குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

