தென்மேற்கு தில்லியில் ஒருவா் குத்திக் கொலை
தென்மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில் 34 வயது நபா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கொலை... - சித்திரிப்பு
தென்மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில் 34 வயது நபா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சனிக்கிழமை இரவு ஜே.ஜே. காலனியில் உள்ள ஜண்டா சௌக் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவா்கள் கூறினா். இரவு சுமாா் 10 மணியளவில், கத்திக்குத்து காயங்களுடன் ஒருவா் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினா், அந்த நபா் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மீட்டு தீன் தயாள் உபாத்யாய் (டிடியு) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா் என காவல் துறை தெரிவித்தது.
இதுதொடா்பாக ஓா் அதிகாரி கூறுகையில், ‘அவரது மாா்பின் வலது பக்கத்தில் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. டாப்ரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை அடையாளம் கண்டுகைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

