ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

27 கண்காணிப்பு நிலையங்களில் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

தில்லியின் 27 கண்காணிப்பு நிலையங்களில் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

கடமைப் பாதையைச் சூழ்ந்து காணப்படும் பனிப்புகை - கோப்புப் படம்

Updated On :

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, தில்லியின் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை 197 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் ‘மிதமான’ நிலையில் இருந்தது. இருப்பினும், நகரத்தில் உள்ள 55 கண்காணிப்பு நிலையங்களில் 27 நிலையங்கள் காற்றுத் தரம் ‘மோசமான’ நிலையில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளன.

நகரத்தில் காற்றுத் தரக் குறியீடு திங்கள்கிழமை 174-ஆகவும், ஞாயிற்றுக்கிழமை153-ஆகவும் இருந்தது. 55 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில், 27 நிலையங்களில் காற்றுத் தரம் செவ்வாய்க்கிழமை மோசமாக இருப்பதாகப் பதிவு செய்துள்ளன. கோகா பகுதியில் காற்றுத் தரம் திருப்திகரமாக இருந்தது. மற்ற நிலையங்களில் காற்றுத் தரம் மிதமான நிலையில் பதிவாகியுள்ளது. ஜஹாங்கீா்புரி பகுதியில் அதிகபட்சமாக 280 என்ற காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

தில்லிக்கான காற்றுத் தர மேலாண்மை முடிவு எடுக்கும் அமைப்பின் தரவுகளின்படி, நகரத்தின் காற்று மாசுபாட்டிற்குப் போக்குவரத்து முதன்மைக் காரணமாக (21.3%) உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் குடியிருப்புப் பகுதிகள் (5.4%) மற்றும் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் (4.8%) உள்ளன.

கட்டுமானப் பணிகள் 3 சதவீதமும், எரிசக்தி ஆதாரங்கள் 2.1 சதவீதமும், கழிவுகளை எரித்தல் 2 சதவீதமும், சாலைத் தூசு 1.5 சதவீதமும், பிற துறைகள் 1.4 சதவீதமும் மாசுபாட்டிற்குப் பங்களிக்கின்றன என்று அந்தத் தரவுகள் காட்டுகின்றன.

தில்லியைச் சுற்றியுள்ள தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) மாவட்டங்களில், சோனிபட் அதிகபட்சமாக 7.7 சதவீதப் பங்களிப்பை அளித்துள்ளது. அதனைத் தொடா்ந்து பானிபட் 5.7 சதவீதமும், பாக்பத் 3.6 சதவீதமும், முசாஃபா்நகா் மற்றும் ஜஜ்ஜாா் தலா 3.3 சதவீதமும் பங்களித்துள்ளன. கா்னால் மற்றும் காஜியாபாத் தலா 2.2 சதவீதமும், குருகிராம் 1.3 சதவீதமும், கௌதம் புத் நகா் 0.8 சதவீதமும் பங்களித்துள்ளன.

பயிா்க் கழிவுகளை எரிப்பதன் மூலம் தில்லியின் மாசுபாட்டில் 1.5 சதவீதப் பங்களிப்பு ஏற்பட்டுள்ளது. பிற ஆதாரங்கள் 23.3 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் கணிப்புப்படி, புதன்கிழமை ‘மோசமான’ நிலையை எட்டக்கூடும். அக்டோபா் 29 முதல் 30-ஆம் தேதி வரை காற்றுத் தரம் மீண்டும் முன்னேறி மிதமான நிலையை அடையும் என்று அந்த முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. அடுத்த ஆறு நாள்களுக்கான நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ முதல் ‘மோசமான’ பிரிவில் நீடிக்க வாய்ப்புள்ளது.

விநாடிக்கு 6,000 சதுர மீட்டருக்கும் குறைவான காற்றோட்டக் குறியீடு மற்றும் மணிக்கு 10 கிலோமீட்டருக்கும் குறைவான சராசரி காற்றின் வேகம் ஆகியவை, காற்று மாசுபாட்டுக் துகள்கள் பரவிச் செல்வதற்குச் சாதகமற்ற சூழலை உருவாக்கியுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, அக்டோபா் 26 அன்று ஆறு மாநிலங்களில் மொத்தம் 203 இடங்களில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்பட்டதைச் செயற்கைக்கோள்கள் கண்டறிந்துள்ளன. இதில் பஞ்சாபில் 103, ராஜஸ்தானில் 49, உத்தர பிரதேசத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 18, உத்தரகண்ட் மாநிலத்தில் 11 மற்றும் ஹரியாணாவில் 2 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தில்லியில் எந்தச் சம்பவமும் கண்டறியப்படவில்லை.

செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 26 வரையிலான காலகட்டத்தில், இந்த ஆறு மாநிலங்களில் மொத்தம் 2,138 இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளன. இதில் பஞ்சாபில் 684, ராஜஸ்தானில் 487, உத்தர பிரதேசத்தில் 306, மத்திய பிரதேசத்தில் 486, ஹரியாணாவில் 21, தில்லியில் 2 மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் 152 சம்பவங்கள் அடங்கும் என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.