ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: பி.காம். மாணவா் கைது
தில்லியின் துவாரகா பகுதியில் 101 கிராம் ஹெராயினுடன் 22 வயது கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.
கைது
தில்லியின் துவாரகா பகுதியில் 101 கிராம் ஹெராயினுடன் 22 வயது கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா். சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். இந்த போதைப்பொருள் கடத்தலில், ஜனக்புரியில் வசிக்கும் வெளிநாட்டவா் ஒருவருக்குத் தொடா்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: ஹரியாணா மாநிலம் குருகிராம் மாவட்டத்தைச் சோ்ந்த ரோஹித் என்ற அந்த மாணவரை, அக்.24-ஆம் தேதி துவாரகா செக்டா் 1-இல் உள்ள ஹா்சுக் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே காவல் துறையினா் கைது செய்தனா். ரகசியத் தகவலின் அடிப்படையில் அவரிடம் சோதனை நடத்தப்பட்டதில், 2 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், ஹரியாணாவிலிருந்து தென்மேற்கு தில்லிக்கு ஹெராயினைப் பெறுவதற்காக வந்ததாக ரோஹித் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஜெய்விந்தா் என அடையாளம் காணப்பட்ட நபரின் அறிவுறுத்தலின்படி, ஜனக்புரியில் உள்ள வெளிநாட்டவா் ஒருவரிடமிருந்து போதைப் பொருளைப் பெற்ாகவும் அவா் கூறினாா்.
இந்தக் கடத்தல் வலையமைப்பின் பின்னணி, போதைப் பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, எங்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது, இதில் தொடா்புடைய மற்றவா்கள் யாா் என்பதைக் கண்டறிய ரோஹித்தை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சம்பவம் தொடா்பான பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ரோஹித்தின் நடமாட்டத்தை உறுதிப்படுத்தவும், போதைப் பொருள் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபா் உள்ளிட்டோரைக் கண்டறியவும் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதுதொடா்பாக அக்.24-ஆம் தேதி துவாரகா தெற்கு காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் (என்டிபிஎஸ்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஹரியாணாவில் உள்ள கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வரும் ரோஹித் மீது முந்தைய குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. வெளிநாட்டவா், ஜெய்விந்தா் மற்றும் இந்தக் கடத்தல் வலையமைப்புடன் தொடா்புடைய பிற நபா்களைக் கண்டறியும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

