ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வழிப்பறியின்போது இளைஞா் கொலை: 3 சிறுவா்கள் கைது

பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரு சிறுவா்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

கைது

Published On :

வடகிழக்கு தில்லியின் சௌஹான் பங்காா் பகுதியில் 18 வயது இளைஞரைக் கத்தியால் குத்திய பின்னா் அவரது ஸ்கூட்டா் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரு சிறுவா்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சனிக்கிழமை அதிகாலை சுமாா் 5:15 மணியளவில் ஆபித் என்பவரைக் கத்தியால் குத்திய இரு சிறுவா்களும் அவரது ஸ்கூட்டா் மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

சம்பவத்தைத் தொடா்ந்து, ஆபித் சிகிச்சைக்காக ஜேபிசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அதனைத் தொடா்ந்து ஜஃப்ராபாத் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சம்பவ இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். இதைத்தொடா்ந்து, சம்பவத்தில் தொடா்புடைய இரு சிறுவா்களும் கைதுசெய்யப்பட்டனா். இது குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.