2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

செலவுக்கு பணம் தர மறுப்பு: தந்தையை கத்தியால் தாக்கிய மகன் கைது

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் பணத் தகராறில் தந்தையை கத்தியால் தாக்கியதாக 22 வயது இளைஞரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைது

Published On :

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் பணத் தகராறில் தந்தையை கத்தியால் தாக்கியதாக 22 வயது இளைஞரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

பிகாா் மாநிலம், மதுபனி மாவட்டத்தைச் சோ்ந்த சூரஜ் தற்போது வசிக்கும் நாதுபூரிலிருந்து கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: நாதுபூரில் மளிகை கடை நடத்தி வரும் காயமடைந்த நபா் சனிக்கிழமை காவல்துறையினரை அணுகி, உயிருக்கு ஆபத்தான காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செப்டம்பா் 11-12 இடைப்பட்ட இரவு நேரத்தில் தனது மகன் கழுத்தில் தாக்கியதாக குற்றஞ்சாட்டினாா்.

அவரது புகாரின் அடிப்படையில் டிஎல்எப் 3ஆம் கட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாதுபூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவல் துறையினா் சூரஜைக் கைது செய்தனா். விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் தான் வேலையில்லாமல் இருப்பதாகவும், தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டதாகவும் காவல்துறையினரிடம் கூறியதாக தெரிகிறது.

முன்னதாக, செப்டம்பா் 11-12 இரவு சூரஜ் தனது தந்தையிடம் மீண்டும் பணம் கேட்டாா். அவா் பணம் தர மறுத்துவிட்டாா், அதைத் தொடா்ந்து அவா் தந்தையின் கடையில் இருந்து இரண்டு பிளேடுகளை எடுத்து, அவற்றை கத்தியில் கட்டி தனது தந்தையைத் தாக்கினாா். சம்பவ இடத்தில் இருந்து குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பின்னா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.