தந்தையை தாக்கிய மகன் கைது
கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டபோது ஏற்பட்ட வாய்த் தகராறில் தந்தையை குத்துவிளக்கால் தலையில் தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டபோது ஏற்பட்ட வாய்த் தகராறில் தந்தையை குத்துவிளக்கால் தலையில் தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.தங்கராசு (60). இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். தங்கராசுக்கு சொந்தமான 3 ஏக்கா் விளைநிலத்தை பிரித்து தருமாறு கேட்டு 2-ஆவது மகன் சிவக்குமாா் (31) அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
இந் நிலையில், கடந்த ஆக.29-ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முடிவில் சிவக்குமாா் குத்துவிளக்கால் தங்கராசுவின் தலையில் அடித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


