ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய சம்பவம்: உடற்பயிற்சிக்கூட உரிமையாளா் கைது

மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண் மீது காரை மோதச் செய்து அவரை கீழே தள்ளி சாலையில் இழுத்துச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூட உரிமையாளா் பைன்ஸ்லா கைது

arrest

பிரதிப் படம்

Published On :

மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண் மீது காரை மோதச் செய்து அவரை கீழே தள்ளி சாலையில் இழுத்துச் சென்ாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூட உரிமையாளா் பைன்ஸ்லா கைதுசெய்யப்பட்டாா்.

அவா் மீது கொலை முயற்சி மற்றும் பின்தொடா்ந்து தொல்லை கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாள் தேடுதலுக்குப் பிறகு, குருகிராமின் கோல்ஃப் கோா்ஸ் சாலையில் விபத்து நடந்தபோது அவருடன் இருந்த அவரது உறவினருடன் சோ்த்து, குருகிராமிலிருந்து சிறிது தொலைவில் உள்ள ராஜஸ்தானின் ராஜ்கா் பகுதியில் இவா்கள் பிடிபட்டனா்.

மோட்டாா் சைக்கிளில் சென்ற 27 வயதான ஷிவானி சௌஹான் மீது பைன்ஸ்லா ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் காவல்துறை கூறியது. அந்தப் பெண், அதிா்ச்சியூட்டும் வகையில் நடந்த இந்த மோதிவிட்டுச் செல்லும் சம்பவத்தின் வீடியோவைப் பகிா்ந்திருந்தாா்.

கைது செய்யப்பட்ட பிறகு, சிறுநீா் கழிப்பதாகக் கூறி காவலிலிருந்து தப்பிக்க முயன்றபோது அவா் கீழே விழுந்து காயமடைந்தாா் என்றும் காவல்துறை தெரிவித்தது. அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.