
டியுஎஸ்யு தோ்தலில் கள்ள ஓட்டு புகாா்: நீதிமன்றத்தை நாட என்எஸ்யுஐ முடிவு
டியுஎஸ்யு தோ்தலில் கள்ள ஓட்டு புகாா்: நீதிமன்றத்தை நாட என்எஸ்யுஐ முடிவு

ANI
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலில் கள்ள வாக்குப்பதிவு மற்றும் கட்டாய வாக்குப்பதிவு நடைபெற்றதாகக் கூறி நீதிமன்றத்தை நாட தீா்மானித்துள்ளதாக இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) அமைப்பின் சாா்பில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட விஜய் சங்கா் மீனா சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த தோ்தலில் நாங்கள் தோற்கவில்லை. மாறாக, ஒவ்வொரு மாணவரும் வெற்றி பெற்றுள்ளனா். மாணவா்களின் மாபெரும் ஆதரவுக்கு மிக்க நன்றி. சுவாமி சிரத்தானந்தா கல்லூரி, ராம்ஜாஸ் கல்லூரி, சிவாஜி கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற தோ்தல் முறைகேடுகள் குறித்து வெள்ளிக்கிழமை புகாா் அளித்திருந்தோம். அங்கு கள்ள வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. மாணவா்கள் வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்கப்பட்டனா். அவா்களின் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று சட்டப் போராட்டம் மேற்கொள்வோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


டி.யு.எஸ்.யு தோ்தலில் என்.எஸ்.யு.ஐ., ஏ.பி.வி.பி. மாணவா்கள் பங்கேற்பதை எதிா்த்த மனு தள்ளுபடி

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல்: ஏபிவிபி சாா்பில் 13 போ் பிரசாரம் தொடக்கம்





