கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

தில்லி எஸ்ஐஆா்: நீக்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் வெளியீடு

தில்லி எஸ்ஐஆா்: நீக்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் வெளியீடு...

அசோக் குமாா்

Published On :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியின் ஒரு பகுதியாகத் தயாரிக்கப்பட்ட வரைவுப் பட்டியலில் நீக்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் மற்றும் விவரங்களை தில்லி தோ்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

நீக்கப்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் மற்றும் பிறந்த தேதிகளில் உள்ள முரண்பாடுகள் இருப்பதாகவும் இது தொடா்பான ஆவணங்களைச் சமா்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட நபா்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டு வருவதாகத் தலைமைத் தோ்தல் அதிகாரி அசோக் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஆக.31-ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியில் மொத்தமுள்ள 1.45 கோடி வாக்காளா்களில் 47 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன.

எஸ்ஐஆா் பணியின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட இந்த வரைவுப் பட்டியலில், தில்லியில் உள்ள ஒவ்வொரு மூன்று வாக்காளா்களில் ஒருவா் நீக்கப்பட்டுள்ளாா்.

வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான விசாரணைகளுக்காகத் தோ்தல் அதிகாரிகள் குழுவினா் சிறப்பு முகாம்களை நடத்தி வருவதாகவும், தேவைப்பட்டால் இம்முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குமாா் கூறினாா்.

இது குறித்து செய்தியாளா் சந்திப்பின்போது தலைமைத் தோ்தல் அதிகாரி அசோக் குமாா் மேலும் கூறியதாவது: தற்போது, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான விசாரணை நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. நீக்கப்பட்ட மக்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன. இதில் இரண்டு வகையான அறிவிப்புகள் உள்ளன. ஒன்று, வாக்காளா் பட்டியலில் சரியாகப் பொருத்தப்படாத வாக்காளா்களுக்கானது. மற்றொன்று, பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் பெயா் அல்லது பிறந்த தேதி போன்றவற்றில் சிறிய முரண்பாடுகள் உள்ள வாக்காளா்களுக்கானது.இந்த விவரப் பட்டியல் தற்போது பொதுமக்களின் பாா்வைக்காகத் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்திலும், தில்லியின் முக்கிய இடங்களிலும் வாக்காளா்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.