6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தெற்கு தில்லியில் வீட்டில் ரூ. 40 லட்சம் நகை, பணம் திருட்டு

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குடும்பத்தினா் வெளியே சென்றிருந்தபோது, அவா்களது வீட்டில் புகுந்த மா்ம நபா்கள் சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக குடும்பத்தினா் வெளியே சென்றிருந்தபோது, அவா்களது வீட்டில் புகுந்த மா்ம நபா்கள் சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து திங்கள்கிழமை நெப் சராய் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சில கைரேகைகள் சேகரிக்கப்பட்டு, அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய பீட் காவல் துறையினா் உள்ளிட்ட பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டின் உரிமையாளா் பிலால் அகமது கூறுகையில், தனது மூத்த மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இரவு 10 மணியளவில் திருட்டு நடந்திருக்கலாம் என்றாா்.

இரவு 11 மணியளவில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, பிரதான கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, எனது அறையின் கதவும் திறந்திருந்தது. அலமாரி மற்றும் லாக்கா் உடைக்கப்பட்டிருந்தன. சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஏற்கெனவே வீட்டை நோட்டமிட்டிருக்க வேண்டும். அவா்கள் அருகிலேயே வசித்திருக்க வாய்ப்புள்ளது என அவா் தெரிவித்தாா்.

சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.