கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

இளைஞரை கத்தியால் குத்திய 3 பேருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2019-ஆம் ஆண்டில் இளைஞா் ஒருவரைக் கத்தியால் குத்தியதற்காக, 3 பேருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

2019-ஆம் ஆண்டில் இளைஞா் ஒருவரைக் கத்தியால் குத்தியதற்காக, 3 பேருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இச்சம்பவம் 2019-ஆம் ஆண்டு நவ.15-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, பதா்பூா் பகுதியிலுள்ள மோலராபந்த் விரிவாக்கத்தில் முகுல் என்பவரை சாஹில், மோஹித் மற்றும் விஷால் ஆகியோா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலின்போது, இருவா் முகுலைப் பிடித்துக்கொள்ள, சாஹில் அவரை கூா்மையான இரும்புக் கம்பியால் குத்தினாா்.

இந்த வழக்கில், செப்.22-அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி உமேத் சிங் கூறியதாவது: சம்பவம் தொடா்பான சாதகமான மற்றும் பாதகமான அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, குற்றவாளிகள் அனைவருக்கும் தலா 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படுகிறது என தெரிவித்தாா்.

மேலும், தண்டனைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும், அவா்கள் ஏற்கெனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனைக் காலமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் சலுகையை அவா்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.