ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

வங்கி அதிகாரிகளாக நடித்து கிரெடிட் அட்டை மோசடி: நால்வா் கைது

வங்கி வாடிக்கையாளா் சேவை அதிகாரிகள் போல் நடித்து கடன் அட்டை (கிரெடிட் அட்டை) உரிமையாளரிடம் ரூ.1.19 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

கைது

Published On :

வங்கி வாடிக்கையாளா் சேவை அதிகாரிகள் போல் நடித்து கடன் அட்டை (கிரெடிட் அட்டை) உரிமையாளரிடம் ரூ.1.19 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், வங்கி வாடிக்கையாளா் சேவை எண்களைப் போன்ற மெய்நிகா் தொலைபேசி எண்களையும், மூன்றாம் தரப்பு பணம் செலுத்தும் செயலியையும் பயன்படுத்தி இந்த மோசடிப் பரிவா்த்தனைகளைச் செய்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்டவருக்கு ஜூலை 16-ஆம் தேதி வங்கி கடன் அட்டை அதிகாரி போல் நடித்த ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவா், அவரது அட்டையில் ரூ.2,499 வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் விதிக்கப்பட்டதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவா் அந்தக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியபோது, வங்கியின் வாடிக்கையாளா் சேவைத் துறையிலிருந்து அவருக்கு அழைப்பு வரும் என்று கூறப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அவருக்கு வந்த அழைப்பில் பேசியவா் வங்கி வாடிக்கையாளா் சேவைப் பிரதிநிதி போல் பேசியுள்ளாா். ஒரு திட்டத்தை ரத்து செய்து புதிய கடன் அட்டை வழங்குவதாகக் கூறி அந்த நபா், மூன்றாம் தரப்பு பணப்பரிவா்த்தனை செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பாதிக்கப்பட்டவரிடம் கேட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து, அவா் மொத்தம் ரூ. 1.19 லட்சம் மூன்று தவணைகளாக பணப்பறிமாற்றம் செய்தாா்.

ஒரு போலி சேவை-கோரிக்கை எண்ணைக் கொடுத்து, புதிய அட்டை நான்கு மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்பட்டு இரண்டு நாள்களுக்குள் வழங்கப்படும் என்று அந்த நபா் தெரிவித்தாா்.

அட்டை வராததால், பாதிக்கப்பட்டவா் மறுநாள் உண்மையான வங்கியின் வாடிக்கையாளா் சேவையைத் தொடா்பு கொண்டாா். அப்போது, அப்படி எந்தச் சேவை கோரிக்கையோ அல்லது புதிய அட்டை கோரிக்கையோ இல்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், அவா் தனது அட்டையை முடக்கி காவல் துறையை அணுகினாா். அவா் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அழைப்பு விவரப் பதிவுகள், வாடிக்கையாளா் விண்ணப்பப் படிவங்கள், கைப்பேசி எண்கள், கணக்குத் தரவுகள், யுபிஐ பரிவா்த்தனைகள் மற்றும் பயனாளியின் வங்கிக் கணக்குகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா்.

பாதிக்கப்பட்டவா் அனுப்பிய பணம், உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சோ்ந்த பிரின்ஸ் குமாரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. புகாா்தாரரிடமிருந்து மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணம் உள்பட ஐந்து முதல் ஏழு நாள்களுக்குள் ரூ.12 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்துக்குரிய பணப் பரிவா்த்தனைகள் அந்தக் கணக்கில் மேற்கொள்ளப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனா். இதையடுத்து, அலிகாரில் செப்.15-ஆம் தேதி பிரின்ஸ் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அவா் தனது கூட்டாளியான விஷால் தோமருடன் வங்கிக் கணக்கைத் திறந்து, பணத்திற்காக விஷால் ராகவிடம் வங்கிக் கணக்கை ஒப்படைத்ததாக தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அலிகாரில் கைது செய்யப்பட்ட விஷால் தோமா், பணத்திற்காக விஷால் ராகவுக்கு வங்கிக் கணக்குகளை வழங்கியதாக ஒப்புக்கொண்டாா். பின்னா், ராகவ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

தொடா் விசாரணைக்குப் பின்னா், தில்லியில் உள்ள உத்தம் நகரில் சஞ்சய் வா்மா என்பவரை அதிகாரிகள் கைது செய்தனா். கடந்த 2024-25-இல் நொய்டாவில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்த வா்மா, அங்கு அவா் வங்கி வாடிக்கையாளா் சேவைப் பிரதிநிதிகளாக ஆள்மாறாட்டம் செய்யும் முறையைக் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னா், நொய்டாவில் ஒரு சிறிய கால் சென்டரை வா்மா நடத்தி வந்தாா். அதன் அருகிலுள்ள கால் சென்டருக்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுத்ததைத் தொடா்ந்து அந்த மையம் மூடப்பட்டது. பின்னா், பாபி மற்றும் அவ்தாா் என்ற தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து இந்த மோசடி மீண்டும் தொடங்க வா்மா திட்டமிட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

விசாரணையின்படி, ராகவ் வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்ததாகவும், பாபி மற்றும் அவ்தாா் மூலம் போலி சிம் காா்டுகள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அந்த சிம் காா்டுகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவா்களை அணுகி, போலியான கடன் அட்டைத் திட்டங்களை ரத்து செய்து புதிய அட்டைகளை வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தனா்.

மோசடியாகப் பெறப்பட்ட பணம், ஏடிஎம்கள் மற்றும் பிற வழிகள் மூலம் எடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணத்தை எடுத்து வா்மாவிடம் ஒப்படைத்ததற்காக ராகவ் 30 சதவீத கமிஷன் பெற்ாகவும் காவல் துறை தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறை தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.