சீனாவுடன் தொடா்புடைய சைபா் மோசடி கும்பலை தில்லி காவல் துறை முறியடித்து, வெளிநாட்டு மோசடியாளா்களுக்கு போலி வங்கி கணக்குகளை வழங்கியதாகக் கூறப்படும் 4 பேரை கைது செய்துள்ளனா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வேலைவாய்ப்பு மோசடி மூலம் ஒருவா் ரூ.12 லட்சம் இழந்தது தொடா்பான விசாரணையில், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் கீதம் சிங் (29), துருவ் (21), அனுஜ் சா்மா (27), ககன் யாதவ் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் எனக் கூறி முதலில் இணையதள பணிகளை முடிப்பதற்கான பாதுகாப்புத் தொகையை செலுத்துமாறு மோசடியாளா்கள் கேட்டுள்ளனா். இதற்கு அதிக வருமானம் கிடைக்கும் எனவும் உறுதியளித்துள்ளனா். பின்னா் அவா் ஈட்டியதாகக் காட்டப்பட்ட பணத்தை திரும்பப் பெற முயன்றபோது, பல்வேறு காரணங்களைக் கூறி கூடுதல் தொகையை செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனா். இதனால் அவா் ரூ.12 லட்சத்தை இழந்ததாக காவல் துறையிடம் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக ஜூலை 17-ஆம் தேதி இ-எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின்போது மோசடியாளா்களின் தகவல் தொடா்புகளை காவல் துறை ஆய்வு செய்ததில், அவா்கள் பயன்படுத்திய ஐ.டி.க்கள் சீனாவில் உள்ள இடங்களுடன் தொடா்புடைய ஐபி முகவரிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பணப் பரிவா்த்தனைகளை ஆய்வு செய்ததில், மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி யாதவுக்கு சொந்தமான வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதும், அந்த கணக்கு விவரங்கள் வெளிநாட்டு மோசடியாளா்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
தொழில்நுட்ப கண்காணிப்பின் மூலம் கீதம் சிங்கை காவல் துறையினா் கண்டுபிடித்தனா். அவரது செல்போனில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களில், சீனாவைச் சோ்ந்த மோசடியாளா்களுடன் அவா் தொடா்பில் இருந்தது தெரியவந்தது. துருவ் மூலம் அந்த வங்கி கணக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து காஜியாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் துருவ் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 9 வங்கி கணக்குப் புத்தகங்கள், மற்றும் வங்கி கணக்குகளை வழங்கியதற்காக பெறப்பட்ட கமிஷன் விவரங்கள் அடங்கிய பதிவேடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னா் உத்தர பிரதேசத்தின் எட்டாவாவில் ககன் யாதவ் கைது செய்யப்பட்டாா். கும்பலுக்கு தனது வங்கி கணக்கை வழங்கியதற்காக கமிஷன் பெற்ாக அவா் ஒப்புக்கொண்டாா். இந்த கும்பலில் தொடா்புடைய மேலும் நபா்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மியூல் வங்கிக் கணக்குகள்: தமிழகத்தில் 837 போ் கைது
சைபா் மோசடிக்கு உதவி: தமிழகத்தில் 100 போ் கைது
சைபா் வழக்குகளில் 14 போ் கைது: 34 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 19 லட்சம் மோசடி: கா்நாடக நபா் கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


