கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சைபா் வழக்குகளில் 14 போ் கைது: 34 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு

சைபா் வழக்குகளில் 14 போ் கைது: 34 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 ஜூலை 2026, 12:21 am IST

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபா் குற்றப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு இணையவழி நிதி மோசடி வழக்குகளில் தொடா்புடைய 14 பேரைக் கைது செய்த 34 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கிப் பாராட்டினாா்.

சைபா் மோசடி வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகள் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 14 போ் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காவலில் அடைக்கப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களில் 4 போ் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவா்கள் என போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து கைப்பேசிகள், டேப்லெட்கள், பென்டிரைவ்கள், காசோலைப் புத்தகங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஏடிஎம் அட்டைகள், நிறுவன ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல், ஆவண ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்ட 2 காவல் உதவி ஆணையா்கள், 6 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட மொத்தம் 34 காவல் அதிகாரிகள், காவலா்களை காவல் ஆணையா் அமல்ராஜ், காவல் ஆணையரகத்துக்கு நேரில் அழைத்து சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கிப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.