ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

2020 தில்லி கலவரம்: காவல்துறை மீது தாக்குதல் நடத்திய 5 பேருக்கு 2 ஆண்டு சிறை

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரத்தின்போது, பஜன்புரா பெட்ரோல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறையில் காவல் துறையினரைத் தாக்கி, கலவரத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிறை - பிரதிப் படம்

Published On :

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரத்தின்போது, பஜன்புரா பெட்ரோல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறையில் காவல் துறையினரைத் தாக்கி, கலவரத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பஜன்புரா பெட்ரோல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறையில் பங்கேற்ாகக் கூறப்பட்ட இந்த 5 பேரையும் செப். 9-ஆம் தேதி நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்திருந்தது. கலவரத்தில் ஈடுபட்டது, அரசு ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது அல்லது தாக்கியது, காவல் துறையினருக்கு எதிராக குற்றவியல் வலிமையைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளில் அரிஃப், முகமது காலித், அப்துல் சத்தாா், தன்வீா் அலி, ஹுனைன் ஆகியோா் குற்றவாளிகளாகத் தீா்ப்பளித்து கூடுதல் அமா்வு நீதிபதி பா்வீன் சிங் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் நீதிமன்றம் கூறியதாவது: சட்டம்-ஒழுங்கைப் பராமரித்து, கலவரத்தைத் தடுக்க முயன்ற அரசு மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளதால், இந்த வழக்கில் மிகவும் தளா்வான அணுகுமுறையைப் பின்பற்ற முடியாது. சட்டவிரோதக் கூட்டம், காவல் துறையினரைத் தாக்கியது மற்றும் அவா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகியவை தண்டனையைத் தீவிரமாக்கும் காரணிகளாக உள்ளன என்று தெரிவித்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் மதுகா் பாண்டே ஆஜராகி, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினாா். பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை குற்றவாளிகள் வன்முறையாகத் தாக்கியதாகவும், அரசின் செயல்பாட்டை பாதிக்கும் தீவிர சமூக விரோதச் செயல்களில் அவா்கள் ஈடுபட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், குற்றவாளிகளின் சமூக-பொருளாதாரச் சூழல், அவா்கள் இதற்கு முன்பு எந்தக் குற்றத்திலும் ஈடுபடாதவா்கள் என்பது, 5 பேரும் தங்களது குடும்பங்களின் ஒரே வருவாய் ஈட்டுபவா்களாக இருப்பது உள்ளிட்ட தண்டனையைக் குறைக்கும் காரணிகளையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது. மேலும், இந்த வழக்குக்குப் பிறகு அவா்கள் வேறு எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டாா்.

கலவரத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்களைத் தாக்கியது அல்லது பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 152-ஐ, பிரிவு 149-உடன் இணைத்து விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையுடன், கலவரத்தில் ஈடுபட்டது, அரசு ஊழியா்களைத் தாக்கியது அல்லது அவா்களுக்கு எதிராக குற்றவியல் வலிமையைப் பயன்படுத்தியது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து தண்டனைகளும் ஒரே காலத்தில் அமல்படுத்தப்படும் என்றும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஏற்கெனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்துக்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், அவா்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்படவில்லை. ஏற்கெனவே சிறையில் இருந்த காலம் மற்றும் வேறு ஏதேனும் வழக்கில் அவா்களது விசாரணை தேவைப்படுகிறாா்களா என்பதன் அடிப்படையில் விடுதலை அமையும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.