
தில்லியில் ஒரே வாரத்தில் 14,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு
தில்லியில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக ஒரு வாரம் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில் 14,160 சலான்கள் மற்றும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக ஒரு வாரம் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில் 14,160 சலான்கள் மற்றும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாக போக்குவரத்து காவல் துறையினா் தெரிவித்தனா். இதில், சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டியவா்களுக்கு எதிராக அதிகபட்சமாக 10,434 சலான்கள், நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
தில்லியில் செப்.20 முதல் 26-ஆம் தேதி வரை இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவது வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பிற சாலைப் பயனாளா்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதால், இது நடவடிக்கையின் முக்கிய இலக்காக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில், வாகனங்களில் கருப்பு நிற கண்ணாடி பொருத்தியதற்காக 917 சலான்களும், தனியாா் பேருந்துகளுக்கு எதிராக 1,311 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
முறையற்ற முறையில் அல்லது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதற்காக 691 சலான்களும், அனுமதிச் சீட்டு விதிமீறல்களுக்காக 438 சலான்களும் வழங்கப்பட்டன.
மேலும், எஸ்சி,ஆா்சி விதிமீறல்களுக்காக 76,63 வழக்குகளும், சட்டப்பூா்வ உத்தரவுகளை மீறியதற்காக 44 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 50 சலான்கள் வழங்கப்பட்டன. இவற்றைத் தவிர, பிற்வேறு போக்குவரத்து விதிமீறல்களின் கீழ் 136 சலான்கள் வழங்கப்பட்டதாக தில்லி போக்குவரத்து காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





