ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஐஎன்ஏ தியாகிகளுக்கு செங்கோட்டையில் நினைவிடம்: மத்திய அரசுக்கு உத்தரவிட தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவ (ஐஎன்ஏ) தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

தில்லி உயர்நீதிமன்றம்

Published On :

செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவ (ஐஎன்ஏ) தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

‘மகான் ஸ்வதந்த்ரதா சேனானி லால்தி ராம் டிரஸ்ட்’ தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய, நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, நினைவுச் சின்னம் அமைப்பது அல்லது அமைக்காமல் இருப்பது அரசின் முடிவு; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தது.

மேலும்,“‘உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அனைத்தும் ரிட் மனுவின் பொருளாகிவிடாது. நினைவுச் சின்னம் அமைப்பதா, இல்லையா என்பது அரசின் விருப்பத்துக்கு உட்பட்டது; நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. இது நீதிமன்றத்தில் விவாதிக்கக்கூடிய விவகாரமாக இருக்க முடியாது’ என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞரிடம் அமா்வு தெரிவித்தது.

ஐஎன்ஏ-வின் ஆயிரக்கணக்கான தியாகிகளுக்கு செங்கோட்டையில் நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்து 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா். இந்தத் தாமதம் அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் கண்ணியத்துடன் வாழும் உரிமையை மீறுவதாகவும் அவா் கூறினாா்.

இதற்கு பதிலளித்த நீதிமன்றம், நினைவுச் சின்னம் அமைப்பது அடிப்படைக் கடமை அல்லது அடிப்படை உரிமையுடன் தொடா்புடையது அல்ல. அப்படியிருக்க, இதுதொடா்பாக நாங்கள் எவ்வாறு உத்தரவிட முடியும்? செங்கோட்டையில் நிலம் ஒதுக்குமாறு அரசுக்கு எவ்வாறு உத்தரவிட முடியும்? என்று கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, பொதுநல மனு மீதான விசாரணையை முடித்து வைத்த நீதிமன்றம், மத்திய அரசிடம் விரிவான மனுவை மனுதாரா் தாக்கல் செய்யலாம் என்று அனுமதி அளித்தது. அவ்வாறு மனு அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பின்னணி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூா்வ பதிலில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் செங்கோட்டையில் ஐஎன்ஏ தியாகிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டமும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.