5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சுகாதாரமற்ற சூழலில் திருச்செந்தூர் சந்தை

திருச்செந்தூர், நவ. 4:    திருச்செந்தூரில் தினசரி சந்தை சுகாதாரமற்ற சூழலில் இயங்கி வருகிறது.   திருச்செந்தூரில் தெற்கு ரத வீதி, மேலமாட வீதி, வடக்கு மாட வீதி, கீழ ரத வீதி சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில

Updated On :

திருச்செந்தூர், நவ. 4:    திருச்செந்தூரில் தினசரி சந்தை சுகாதாரமற்ற சூழலில் இயங்கி வருகிறது.

  திருச்செந்தூரில் தெற்கு ரத வீதி, மேலமாட வீதி, வடக்கு மாட வீதி, கீழ ரத வீதி சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் 2000-ம் ஆண்டு வரை தினசரி காய்கறி சந்தைகள் தாற்காலிகமாக செயல்பட்டு வந்தன.

  இதை ஒரே இடத்தில் செயல்படுத்த முடிவு செய்த பேரூராட்சி நிர்வாகம் 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாட்டுத்தாவணியிலுள்ள பேருந்து நிலையத்துக்கு பின்புறம் உள்ள இடத்தை தினசரி சந்தைக்கு ஒதுக்கீடு செய்தது.

  இதையடுத்து, அங்கு சுமார் 10க்கு 10 அடி அளவில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட தொடங்கின. இக்கடைகளில் நாள் ஒன்றுக்கு தரை வாடகையாக ரூ. 10 பேரூராட்சி நிர்வாகம் வசூல் செய்து வருகிறது.

  தினசரி காய்கறி சந்தை என்ற போதும், அனைத்துப் பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பல்நோக்கு வணிக மையமாக தற்போது செயல்பட்டு வருகிறது.

  இங்கு தினமும் திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

  இந்த சந்தைக்கு பொதுமக்கள் வந்து செல்ல சாலை வசதிகள் சரியாக இல்லை.  மழைக் காலங்களில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதைகளில் குட்டை போல மழை நீர் தேங்கியுள்ளது.

  பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், குப்பைகள், காய்கறி கழிவுகளை தினசரி முறையாக அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.  

   மீன் விற்பனை செய்யும் பகுதி சுகாதாரமற்ற நிலையிலேயே ஆண்டு முழுவதும் காணப்படுகிறது.

  சந்தையின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதுடன், இறந்த நிலையில் கிடக்கும் நாய், பன்றி, கோழிகள் உள்ளிட்டவையும் தூர்நாற்றம் வீசி சுகாதரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.

  சந்தைக்கு அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அரசு மாணவ, மாணவிகள் விடுதி ஆகியன செயல்படுகின்றன. தினசரி சந்தையை சுற்றியுள்ள சுகாதாரமற்ற சூழலால் மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

  சந்தைக்கு நவீன வசதிகளுடன் நிரந்தர கட்டடம் கட்டி கொடுக்கும் வேண்டும் என்பது வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.  இந்த கோரிக்கை நிறைவேறும்பட்சத்தில் பேரூராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.

  சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் சந்தைக்கு நிரந்தர கட்டடம் கட்டப்படும் என்று, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.