புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கன்னியாகுமரியில் தலைவர்கள் சிலை வைக்க அனுமதி: சுற்றுலா மையத்துக்கு பாதிப்பு?

கன்னியாகுமரி, நவ.20:÷சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் மறைந்த தலைவர்களின் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்பட்டு வருவதால் சுற்றுலா மையம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ÷இந்தியா மட்டுமின்றி உலகின் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:33 pm

தி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி, நவ.20:÷சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் மறைந்த தலைவர்களின் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்பட்டு வருவதால் சுற்றுலா மையம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

÷இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் கன்னியாகுமரி.

÷இந்தியாவின் தென்பகுதி என்பதாலும், அமைதியான இடம் என்று பெயர் பெற்றுள்ளதாலும் ஆன்மிகவாதிகள் மனதில் கன்னியாகுமரி முக்கிய இடம் பிடித்துள்ளது.

÷இந்த அமைதியான சூழலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில ஆண்டுகளாக மறைந்த தலைவர்களின் சிலைகளை அமைக்க கேட்டு பல்வேறு கட்சியினரும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

÷கன்னியாகுமரி பேரூராட்சி பழைய பஸ் நிலையம் அருகாமையில் அண்ணா சிலை வைக்க திமுகவினரும், ராஜீவ்காந்தி சிலை வைக்க காங்கிரஸ் கட்சியினரும், எம்.ஜி.ஆர். சிலை வைக்க அதிமுகவினரும், முத்துராமலிங்கத் தேவர் மற்றும் நேதாஜி சிலை வைக்க தமிழ்நாடு தேவர் பார்வர்டு பிளாக் கட்சியினரும் பேரூராட்சியில் அனுமதி கோரியிருந்தனர்.

÷மேலும் சிவாஜிகணேசன், இந்திராகாந்தி ஆகியோரின் சிலைகள் வைக்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

÷கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் பிரச்னை வரக்கூடும் என்ற அடிப்படையில் தலைவர்களின் சிலைகளை அமைக்க தற்போதைய பேரூராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது.

÷அண்ணா சிலை அமைக்க திமுகவினருக்கு பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்த நிலையில் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற திமுகவினர் நவ.30-ம் தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து அண்ணா சிலைக்கு திறப்பு விழா நடத்துகின்றனர்.

÷சிலை அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காந்தி நினைவு மண்டபம் அருகே எதிர்ப்புகளை மீறி ராஜீவ்காந்தி சிலை விரைவில் அமைக்கப்படும் என  மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும், ஜனவரி 26-ம் தேதி முத்துராமலிங்கத் தேவருக்கும், நேதாஜிக்கும் நேசமணி பூங்காவில் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு தேவர் பார்வர்டு பிளாக் கட்சியினரும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

÷இதனிடையே அண்ணா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த பேரூராட்சி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் வெண்கல சிலையை அமைக்க அதிமுகவினருக்கு அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா சிலை அமையவிருக்கும் பகுதியிலேயே எம்.ஜி.ஆர். சிலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

÷பல்வேறு நாட்டினரும் வந்து செல்லும் சுற்றுலாத் தலத்தில் தலைவர்கள் சிலைகளை வைப்பதால் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது. சிந்திக்குமா மாநில அரசு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.