புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்: அடிப்படை வசதிகளின்றி தவிப்பு

கன்னியாகுமரி, ஏப். 22: கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால்  கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.   ஆனால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாததால் குடிநீருக்கே பயணிக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:02 am

தி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி, ஏப். 22: கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால்  கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

  ஆனால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாததால் குடிநீருக்கே பயணிகள் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

  சர்வதேச சுற்றுலாத் தலமான இங்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, புகழ்மிக்க பகவதியம்மன் கோயில், வரலாற்றுச் சிறப்பு மிக்க வட்டக்கோட்டை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

  சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக, பொருளாதாரத்தைப் பெருக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், 50-க்கும் மேற்பட்ட உணவகங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் நடத்தப்படுகின்றன.  

  இது தவிர, சீசன் நேரங்களில் பேரூராட்சி நிர்வாகம் தாற்காலிகக் கடைகளை அமைத்தும், கார் பார்க்கிங் ஏலம் விட்டும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது.   இருந்தும், அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் பேரூராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை என்பது பயணிகளின் கவலையாகும்.   இத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வரும் என். சுரேஷ்ராஜன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

  கடந்த 15 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சிக்காக எந்த ஒரு சிறப்புத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் முக்கடல் சங்கமம், பகவதியம்மன் கோயில் வளாகம், சன்-செட் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர்த் தொட்டிகள் கூட இல்லை.   மேலும், இரவு நேரத்தில் காந்தி நினைவு மண்டபத்திலிருந்து மணல்தேரிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள மின்கம்பங்களில் தெரு விளக்கு எரிவதும் இல்லை. எனவே, இவ்வழியில் இரவு 7 மணிக்கு மேல் அங்கு வசிக்கும் மக்கள்கூட தனியாகச் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். கழிப்பிட வசதியும் அறவே இல்லை என்பது சுற்றுலாப் பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

   இது தவிர ரோப்-கார் திட்டம், மெரீனா பீச் போன்று கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம், விவேகானந்தபுரம்- கடற்கரை வரை மின்கம்பிகளை பூமிக்கடியில் பதிக்கும் திட்டம், கன்னியாகுமரி- வட்டக்கோட்டை வரை 5 கி.மீ. தொலைவுக்கு  கடலுக்குள் சுற்றுலாப் படகு விடும் திட்டம், மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பகுதிகளை இணைத்து பஸ் இயக்கும் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டதுடன் நின்றுவிட்டன. பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட சுற்றுலா சைக்கிள், சுற்றுலா நட்பு ஆட்டோ திட்டம் சில நாள்களிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

   இப்போது சீசன் தொடங்கியுள்ள வேளையில், தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் வந்த அன்றே திரும்பிச் செல்லும் நிலைதான் காணப்படுகிறது.

  சுற்றுலாப் பயணிகள் மூலம் அதிகளவு வருவாய் ஈட்டும் பேரூராட்சி நிர்வாகம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவேண்டும் என்பதே அனைவரின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.