பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண் போலீஸ் தீக்குளிப்பு: கணவர் விஷம் குடித்து தற்கொலை

கோவில்பட்டி, ஜன. 8:     ராஜபாளையம் அருகே மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவர் சனிக்கிழமை கோவில்பட்டியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த ஆர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவில்பட்டி, ஜன. 8:     ராஜபாளையம் அருகே மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவர் சனிக்கிழமை கோவில்பட்டியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆரோக்கியராஜ் (30).

இவருக்கும், காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிச்சை மகள் ஜான்சிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.

 ஜான்சி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆசிரியர் பயிற்சி படித்து முடித்த ஆரோக்கியராஜ், தாற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

 ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி காவல் குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியிடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜான்சி, வீட்டில் வைத்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

பலத்த காயமடைந்த அவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இந்நிலையில், கோவில்பட்டியிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்த அவரது கணவர் ஆரோக்கியராஜ், சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  

 இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான்சி, அங்கு  சனிக்கிழமை இறந்தார். இறந்த ஜான்சி 6 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.