நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுப் பேருந்து டிக்கெட்டுகளில் தவறாக பதிவாகும் தேதி

கடையநல்லூர், மே 18: அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் சிலவற்றில் வழங்கப்படும் பயணச் சீட்டில், சரியான தேதி பதிவாகாத நிலையுள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தனியார் நிறுவனங்களில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:42 am

வி.குமாரமுருகன்

கடையநல்லூர், மே 18: அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் சிலவற்றில் வழங்கப்படும் பயணச் சீட்டில், சரியான தேதி பதிவாகாத நிலையுள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் பெரும்பாலானவற்றில், மின்னணு சாதனத்தை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. சில பேருந்துகளில் மட்டும் சாதாரண வகை டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்த மின்னணு சாதனத்தின் மூலம் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் போக்குவரத்துக் கழக கிளையின் பெயர், தேதி, நேரம், பயணி ஏறிய இடம், இறங்க வேண்டிய இடம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், சில பேருந்துகளில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் தேதி தவறாக அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுவதாக (படம்) கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரான, சொக்கம்பட்டி முருகேசன் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களில், பொருள்களை சந்தைப்படுத்தும் பணியில் இருப்பவர்களுக்கு பயணப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பயணம் செய்த டிக்கெட்டுகளை இணைத்து அனுப்ப வேண்டும்.

முன்பெல்லாம் சாதாரண வகை டிக்கெட்டுகளில் பயண தேதி குறிப்பிடப்படாத நிலை இருந்து வந்தது. இதனால், பயணச் செலவுகளை சரியாக பெற முடிந்தது. ஆனால், தற்போது தேதியுடன் டிக்கெட் வழங்கப்படும் நிலையில், அது சரியான தேதியாக இருந்தால்தான் பயணக் கட்டணத்தைப் பெற வசதியாக இருக்கும்.

சில பேருந்துகளில் டிக்கெட் வழங்கும் மின்னணு சாதனத்தில் சரியான தேதியை நடத்துநர்கள் பதிவு செய்யாத நிலையுள்ளது. இதனால், தவறான தேதியுடன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக 18-5-11 அன்று சொக்கம்பட்டியிலிருந்து, கடையநல்லூருக்கு செல்வதற்காக எடுத்த டிக்கெட்டில் தேதி 10-4-2000 என குறிப்பிடப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டில் அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மின்னணு வசதியுடன் கூடிய டிக்கெட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

எனவே, அரசுப் பேருந்து நடத்துநர்கள் சரியான தேதியுடன் கூடிய பயண டிக்கெட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.